இந்தியா

ராஜஸ்தானில் ஐஎஸ்ஐ உளவாளிகள் இருவர் கைது

ஏஎன்ஐ

ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் ஐ.எஸ்.ஐ உளவாளிகள் என்று சந்தேகிக்கப்படும் இருவர் நேற்று கைது செய்யப்பட்டனர்.

இந்திய ராணுவம் தொடர்பான தகவல்களை இவர்கள் பாகிஸ்தா னுக்கு அனுப்பியதாக சந்தேகிக் கப்படுகிறது. இலாம்தீன், திணா காம்னா என்ற இவ்விருவரும் 55 வயது நிரம்பியவர்கள். இதற்கு முன் இவர்கள் மீது தடா சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

எனவே இவர்களை இந்திய ராணுவம் கண்காணித்து வந்தது.ராஜஸ்தான் சிஐடி போலீஸாரால் கைது செய்யப்பட்ட இருவரும் ஜெய்ப்பூருக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

SCROLL FOR NEXT