மத்திய உள்துறைச் செயலாளர் அஜய் பல்லா, அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் தலைமைச் செயலர்களுக்கு நேற்று எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:
கரோனா நோயாளிக்கு சிகிச்சை அளிக்க ரெம்டெசிவிர் மருந்து பெருமளவில் பயன்படுகிறது. தற்போது வைரஸ் பரவல் அதிகரித்திருப்பதால், இந்த மருந்துக்கு கடும் தட்டுப்பாடு நிலவுகிறது. எனவே, தற்போது மாதத்துக்கு 38.80 லட்சம் யூனிட் அளவுக்கு தயாரிக்கப்படும் ரெம்டெசிவிர் மருந்தின் உற்பத்தியை, 74 லட்சம் யூனிட்டாக அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மே மாத தொடக்கத்துக்குள் மேற்குறிப்பிட்ட அளவில் ரெம்டெசிவிர் மருந்து உற்பத்தி செய்யப்படும். மாநிலங்களுக்கு ஒதுக்கப்படும் ரெம்டெசிவிர் மருந்துகள், மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கப்படுவதை மாநில அரசுகள் உறுதி செய்ய வேண்டும். இவ்வாறு அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.