இந்தியா

இந்தியா பாகிஸ்தான் இடையே பேச்சுவார்த்தையை மீண்டும் தொடங்க முடிவு: நவாஸ் ஷெரீபுடன் சுஷ்மா ஸ்வராஜ் சந்திப்பு

செய்திப்பிரிவு

பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீபை இந்திய வெளியுறவு அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் நேற்று சந்தித்து பேசினார்.

இந்தியா பாகிஸ்தான் இடையே தடைபட்டுள்ள பேச்சுவார்த்தையை மீண்டும் தொடங்கவும் உறவுகளை மேம்படுத்தவும் இரு நாடுகளும் முயற்சி மேற்கொண்டு வரும் நிலையில் இந்த சந்திப்பு நடைபெற்றுள்ளது.

பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமா பாத்தில் ‘ஆசியாவின் இதயம்’ என்ற தலைப்பில் ஆப்கானிஸ்தான் தொடர் பான 2 நாள் மாநாடு நேற்று தொடங் கியது. இம்மாநாட்டில் பங்கேற்பதற் காக சுஷ்மா நேற்று முன்தினம் பாகிஸ்தான் வந்தார்.

மாநாட்டில் நேற்று பங்கேற்ற சுஷ்மா, இடையில் நவாஸ் ஷெரீபை சந்தித்துப் பேசினார். அப்போது, இரு தரப்பு உறவுகளை மேம்படுத்துவது குறித்து அவர்கள் பேசியுள்ளனர். இந்திய வெளியுறவு செயலாளர் எஸ்.ஜெய்சங்கர், பாகிஸ்தான் பிரத மரின் வெளியுறவு ஆலோசகர் சர்தாஜ் அஜீஸ் உள்ளிட்டோர் அப்போது உடனிருந்தனர்.

இந்தியா, பாகிஸ்தானின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர்கள் தாய்லாந்து தலைநகர் பாங்காங்கில் கடந்த சில தினங்களுக்கு முன்பு சந்தித்து பேசினர். அப்போது பயங்கரவாதம், காஷ்மீர் பிரச்சினை மற்றும் இருதரப்பு விவகாரங்கள் குறித்து விவாதித்தனர். இரு நாடுகள் இடையே பேச்சுவார்த்தையை முன்னெடுத்துச் செல்ல ஒப்புக்கொண் டனர். இந்நிலையில் பாகிஸ்தான் பிரத மரை சுஷ்மா சந்தித்து பேசியுள்ளார்.

முன்னதாக ‘ஆசியாவின் இதயம்’ மாநாட்டில் சுஷ்மா பேசியதாவது:

இந்தியா - பாகிஸ்தான் இடையே நட்புறவு மேம்படவும், பல்வேறு துறைகளில் இணைந்து செயல்படவும் முதிர்ச்சி மற்றும் தன்னம் பிக்கையை வெளிப்படுத்த வேண்டிய நேரமிது. அதேநேரத்தில் தீவிரவாதி களுக்கும் பயங்கரவாதிகளுக்கும் பாதுகாப்பான இடம் கிடைக்காமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டிய கடமை சர்வதேச நாடுகளுக்கு உள்ளது.

தமனிகள் அடைபட்டிருந்தால் ‘ஆசியாவின் இதயம்’ செயல்படாது. உள்நாட்டு சண்டை, தீவிரவாதத்தால் பாதிக்கப்பட்டுள்ள ஆப்கனுடன் வர்த்தகம், போக்குவரத்து, தகவல் தொடர்பு உட்பட பல்வேறு துறைகளில் இந்தியா இணைந்து பணியாற்ற விரும் புகிறது. அதேவேளையில் பாகிஸ்தா னுடன் கைகோர்க்கவும் இந்த மாநாட்டை ஒரு சந்தர்ப்பமாக பயன் படுத்திக் கொள்ள விரும்புகிறேன்.

இரு நாடுகளும் முதிர்ந்த மனநிலை யுடன் வர்த்தகம் மற்றும் ஒத்துழைப்புடன் செயல்பட்டு இந்த பிராந்தியத்தை வலுவுடையதாக்க வேண்டும். ஒட்டுமொத்த உலகமும் அதற்காக காத்திருக்கிறது. உலக நாடுகளை நாம் ஏமாற்றம் அடைய செய்யக் கூடாது. அண்டை நாடுகள் என்ற முறையில் ஆப்கானிஸ்தானுடன் இணைந்து செயல்பட நினைக்கிறோம்.

ஆப்கனில் பல பகுதிகளை பிடித்துக் கொள்ள தீவிரவாதிகள் தொடர்ந்து முயற்சிக்கின்றனர். அவர்கள் மாறவில்லை என்பதைத் தான் அது காட்டுகிறது. அதேநேரத் தில் மக்களின் பாதுகாப்புக்கு ஆப்கன் தேசிய பாதுகாப்புப் படையினர் எடுத்து வரும் நடவடிக்கை களுக்கு நாங்கள் தலைவணங்குகி றோம். ஆப்கன் மக்களும் தீவிர வாதத்தை எதிர்த்து வருவதற்கு வணக்கம் செலுத்துகிறோம். ஆப்கனின் ஒற்றுமை, பாதுகாப்புக்கு சர்வதேச நாடுகள் தொடர்ந்து உதவி செய்ய வேண்டும். அதற்காக ஆப்கன் பாதுகாப்பை பலப்படுத்த இந்த நாட்டு அரசுடன் இணைந்து செயல்பட இந்தியா தயாராக இருக்கிறது.

இவ்வாறு சுஷ்மா பேசினார்.

பாகிஸ்தான் செல்கிறார் மோடி

சார்க் நாடுகளின் மாநாடு அடுத்த ஆண்டு செப்டம்பர் மாதம் பாகிஸ் தானில் நடைபெற உள்ளது.

இந்நிலையில் இஸ்லாமாபாத்தில் நேற்று சுஷ்மாவை சந்தித்த செய்தி யாளர்கள், “சார்க் மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடி பாகிஸ்தான் வருவாரா?’ என்று கேள்வி எழுப்பினர். அதற்கு சுஷ்மா, “பிரதமர் மோடி பாகிஸ்தான் வருவார்” என்று பதில் அளித்தார்.

கடந்த 12 ஆண்டுகளில் இந்திய பிரதமர் யாரும் பாகிஸ்தான் செல்ல வில்லை. முன்னாள் பிரதமர் வாஜ்பாய்க்குப் பிறகு, பிரதமரான மன்மோகன் சிங் தனது 10 ஆண்டு கால ஆட்சியில் ஒருமுறைகூட பாகிஸ்தான் செல்லவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT