இந்தியா

காஷ்மீரில் லஷ்கர் தீவிரவாதி சுட்டுக் கொலை

செய்திப்பிரிவு

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் லஷ்கர் இ-தொய்பா தீவிர வாதியை பாதுகாப்பு படையினர் நேற்று சுட்டுக் கொன்றனர்.

தெற்கு காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தை சேர்ந்த ஒமாயிஸ் அஹமது ஷேக் என்கிற ஹம்ஸா என்ற அந்த தீவிரவாதி சம்பல் என்ற பகுதியில் பதுங்கி இருப்ப தாக பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதைத் தொடர்ந்து அப்பகுதிக்கு விரைந்து சென்று பாதுகாப்பு படையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது தீவிரவாதி ஹம்ஸா பாதுகாப்பு படையினரை நோக்கி துப்பாக்கியால் சுட்டு, அங் கிருந்து தப்பிக்க முயன்றார். பதிலுக்கு பாதுகாப்பு படையினர் துப்பாக்கியால் சுட்டதில் தீவிரவாதி ஹம்ஸா உயிரிழந்தார். பின்னர் பிரேத பரிசோதனைக்கு பின் உடலை, அவரது குடும்பத் தினரிடம் பாதுகாப்பு படையினர் ஒப்படைத்தனர்.

அதே சமயம் பாதுகாப்புப் படை யினரின் இந்த நடவடிக்கையை கண்டித்து புல்வாமா மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் கடையடைப்பு போராட்டம் நடத்தப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

-பிடிஐ

SCROLL FOR NEXT