ஹர்ஷ்வர்தன் 
இந்தியா

கரோனா வைரஸை கட்டுக்குள் வைக்க அனைத்து மாநிலத்துக்கும் தேவையான உதவி: மத்திய அமைச்சர் ஹர்ஷ்வர்தன் அறிவிப்பு

செய்திப்பிரிவு

கரோனா வைரஸை கட்டுக்குள் வைக்க அனைத்து மாநிலங் களுக்கும் தேவையான உதவிகளை மத்திய அரசு வழங்கும் என்று மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் தெரிவித்தார்.

இதுகுறித்து மத்திய அமைச்சர் ஹர்ஷ்வர்தன் கூறியதாவது:

நாட்டில் கரோனா வைரஸின் 2-வது அலை தீவிரமாகி வருகிறது.இந்த வைரஸைக் கட்டுக்குள் வைப்பதற்காக அனைத்து நடவடிக்கைகளையும் மத்திய அரசுஎடுத்து வருகிறது. கரோனாபரிசோதனைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. மேலும் கரோனா வைரஸ் தடுப்பூசிகள் போடுவதையும் தீவிரப்படுத்தி வருகிறோம்.

கரோனா வைரஸ் மேலும் பரவாமல் தடுக்க அனைத்து மாநிலங்கள், யூனியன் பிரதேச அரசுகளுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் மத்திய அரசு வழங்கும். இதில் எந்தவித சந்தேகமும் இல்லை.

மாநிலங்களுக்குத் தேவையான ஆக்ஸிஜன் சிலிண்டர் விநியோகம், ரெம்டெசிவிர் மருந்துகள் தேவையான அளவில் வழங்கப்படும்.

ரெம்டெசிவிர் மருந்துகளின் உற்பத்தியை இரட்டிப்பாக்க உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும்மாநிலங்களில் சுகாதார அடிப்படைக் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தடையில்லாமல் ஆக்ஸிஜன் சிலிண்டர்களை வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.

கரோனா தடுப்பூசி டோஸ்கள் சிறிய மாநிலங்களுக்கு 7 நாட்களிலும், பெரிய மாநிலங் களுக்கு 4 நாட்களிலும் மத்திய அரசிடமிருந்து விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

கடந்த ஆண்டு செப்டம்பரில் செய்யப்பட்டு வந்த கரோனா தடுப்பூசி உற்பத்தியை விட தற்போது 10 மடங்கு அதிகமாக உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.

கரோனா நோயாளிகளுக்குத் தற்போது தேவைப்படும் இடங்களில் புதிய மருத்துவமனைகளுக்குப் பதிலாக தற்காலிக மருத்துவமனைகள் உருவாக்கப்பட்டு வருகின்றன. ஏற்கெனவே உள்ள மருத்துவமனை களில் பலவார்டுகள் கோவிட்-19 வார்டுகளாக மாற்றப்பட்டுள்ளன.

அண்மையில் மகாராஷ்டிரா வுக்கு 1,121 வென்டிலேட்டர்களும், உ.பி.க்கு 1,700, ஜார்க்கண்டுக்கு 1,500, குஜராத்துக்கு 1,600, மத்திய பிரதேசத்துக்கு 152, சத்தீஸ்கருக்கு 230 வென்டிலேட்டர் கருவிகள் அனுப்பப்பட்டுள்ளன.

இவ்வாறு அமைச்சர் ஹர்ஷ் வர்தன் கூறினார்.

SCROLL FOR NEXT