கேரள மாநில முதல்வர் உம்மன் சாண்டி நேற்று கூறியதாவது:
முல்லை பெரியாறு அணை தொடர்பாக தமிழக அரசுடன் 999 ஆண்டுகளுக்கு ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. நுாற்றாண்டு பழமையான இந்த அணை எத்தனை ஆண்டுகளுக்கு தாங்கும் என்று தெரியாது. எப்படி இருந்தா லும் இன்றோ அல்லது நாளையோ புதிய அணை கட்டித்தான் தீர வேண்டும். எனவே அதை ஏன் இப்பொழுதே செய்யக் கூடாது.
புதிய அணையால் கேரள மக்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்படும். இதன் மூலம் இப்பிரச்சினைக்கும் தீர்வு கிடைக்கும். தமிழகத்துக்கு தண்ணீர், கேரளாவுக்கு பாதுகாப்பு என்பது தான் எங்களது நிலைப் பாடு. அதில் இருந்து நாங்கள் மாறமாட்டோம். இவ்வாறு அவர் கூறினார்.