இந்தியா

குஜராத் உயர் நீதிமன்ற நீதிபதியை பதவி நீக்கம் செய்ய வேண்டும்: மாநிலங்களவை தலைவரிடம் 58 எம்.பி.க்கள் மனு

செய்திப்பிரிவு

இட ஒதுக்கீடு பற்றி சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக சொல்லப் படும் குஜராத் உயர் நீதிமன்ற நீதிபதியை பதவியிலிருந்து அகற்ற நடவடிக்கை எடுக்கக் கோரி மாநிலங்களவையை சேர்ந்த 58 உறுப்பினர்கள் அவைத் தலைவரி டம் நேற்று மனு கொடுத்தனர்.

அந்த மனுவில் கூறியிருப்ப தாவது:

இட ஒதுக்கீடு கேட்டு போராட்டம் நடத்திவரும் பட்டேல் சமூக தலைவர் ஹர்திக் பட்டேலுக்கு எதிராக சிறப்பு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதை நீதிபதி பர்திவாலா விசாரித்தார். அப்போது அவர் ‘இரு விஷயங்கள் நாட்டை அழித்துவருகின்றன. ஒன்று ஊழல், இன்னொன்று இட ஒதுக்கீடு. இவை நாட்டை முன்னேறவிடாமல் தடுக்கின்றன’ என்று கருத்து தெரிவித்தார்.

அரசமைப்புச் சட்டத்தை உருவாக்கியபோது இடஒதுக்கீடு 10 ஆண்டுகள் நீடிக்கும் என்றே புரிந்துகொள்ளப்பட்டது. ஆனால் சுதந்திரமடைந்து 65 ஆண்டுகள் ஆனபிறகும் அது தொடர்கிறது. இது துரதிருஷ்டவசமானது என்றும் நீதிபதி குறிப்பிட்டுள்ளார்.

10 ஆண்டுகள் ஒதுக்கீடு என்பது அரசியல் சம்பந்தப்பட்ட ஒதுக்கீடு ஆகும். நாடாளுமன்றம், சட்டப்பேரவைத் தொகுதிகளில் எஸ்சி எஸ்டி பிரிவினருக்கு தரப் படும் ஒதுக்கீடு இது. கல்வி, வேலைவாய்ப்புக்கு சம்பந்தப் பட்டது அல்ல இது. எஸ்சி, எஸ்டி சம்பந்தப்பட்ட கொள்கை தொடர்பான அரசமைப்புச் சட்ட விதிகள் பற்றி அறியாமல் இருக்கிறார் நீதிபதி பர்திவாலா. இது வேதனை தருகிறது.

நீதி சார்ந்த நடவடிக்கைகளில் இந்த நீதிபதியின் கருத்து இடம் பெறுகிறது. இது அரசமைப்புச் சட்டத்துக்கு விரோதமானது. அவருக்கு எதிராக பதவி நீக்க நடவடிக்கை எடுக்க முகாந்திரம் உள்ளது. இவ்வாறு அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள் ளது. இந்த மனு பரிசீலனையில் இருப்பதாக மாநிலங்களவை தலைவர் அலுவலக வட்டாரங்கள் தெரிவித்தன.

ஆனந்த் சர்மா, திக்விஜய்சிங், அஸ்வனி குமார். பி.எல். புனியா, ராஜீவ் சுக்லா, ஆஸ்கர் பெர்னாண்டஸ், அம்பிகா சோனி, பி.கே. பிரசாத் (காங்கிரஸ்), டி,ராஜா (இந்திய கம்யூனிஸ்ட்), கே.என்.பாலகோபால் (மார்க்சிஸ்ட்), சரத் யாதவ் (ஐக்கிய ஜனதா தளம்), எஸ்.சி. மிஸ்ரா, நரீந்தர்குமார் காஷ்யப் (பகுஜன் சமாஜ்), திருச்சி சிவா (திமுக) உள்ளிட்டோர் மனுவில் கையெழுத்திட்டுள்ளனர். இத்தகைய மனுவில் மாநிலங் களவை எனறால் குறைந்த பட்சம் 50 எம்பிக்கள் கையெழுத் திடவேண்டும்.

மக்களவை என்றால் 100 எம்.பி.க்களின் கையெழுத்து தேவை.

அகமதாபாதில் டிசம்பர் 12ம் தேதி நடந்த கூட்டம் ஒன்றில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் நகலையும் மனுவுடன் இணைத்துள் ளனர். இட ஒதுக்கீட்டுக்கு எதிராக கருத்து தெரிவித்த நீதிபதி மீது பதவி நீக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என தீர்மானத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது. எம்பிக் கள் எம்எல்ஏக்கள், குஜராத் மற்றும் மத்திய அரசின் முன்னாள் அமைச்சர்கள் இந்த கூட்டத்துக்கு வந்திருந்தனர்.மத்திய அமைச்சர் கள் ராம்விலாஸ் பாஸ்வான், தவார்சந்த் கெலோட் ஆகியோரும் வந்திருந்தனர்.

அரசுக்கு எதிராக போர் தொடுப்பதாக ஹர்திக் பட்டேல் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டை ரத்து செய்த நீதிபதி பர்திவாலா, தேச துரோக குற்றச்சாட்டை ரத்து செய்யவில்லை.

SCROLL FOR NEXT