மும்பையில் பெண் ஓவியர் ஹேமா உபாத்யாயா, அவரது வழக்கறிஞர் ஹரீஷ் பம்பானி ஆகியோர் கொலை செய்யப்பட்ட வழக்கில் முக்கிய குற்றவாளியாகக் கருதப்படும் வித்யா ராஜ்பாரை காவல் துறை தேடி வருகிறது.
ஹேமா தனது கணவரும் ஓவியருமான சிந்தன் உபாத்யாயா விடமிருந்து விவாகரத்து கோரி யுள்ளார். இவ்வழக்கில் ஹேமா தரப்பில் ஹரீஷ் ஆஜராகி வரு கிறார். இந்நிலையில் கடந்த சனிக்கிழமை ஹேமாவும், ஹரீஷும் சடலங்களாக மீட்கப்பட்டனர்.
இருவரின் சடலங்களும் கை கால் கட்டப்பட்ட நிலையில் அட்டைப் பெட்டியில் அடைக்கப்பட்டிருந்தன.
ஹேமாவுக்கும், சிந்தனுக்கும் ஓவியம் வரைவதற்கான பைபர் கண்ணாடிகளை உருவாக்கும் தொழிலில் ஈடுபட்டுள்ள ஆஸாத் ராஜ்பார், பிரதீப் ராஜ்பார், விஜய் ராஜ்பார் ஆகிய மூவரை மும்பை காவல்துறை இக்கொலைகள் தொடர்பாக கைது செய்துள்ளது.
மேலும், உத்தரப்பிரதேசத்தில் சாது ராஜ்பார் என்பவரையும் பிடித் துள்ளது. காவல் துறையிடம் பிடி பட்டுள்ள சாது ராஜ்பார், காவல் துறை வாகனத்தில் ஏற்றப்படும் போது ஊடகங்களுக்கு அளித்த பேட்டியில், வித்யா ராஜ்பார் உத்தர வின்பேரில் இருவரையும் கொன்ற தாக ஒப்புதல் அளித்துள்ளார்.
தலைமறைவாக உள்ள வித்யா வைப் பிடித்தால்தான் இது பணம் தொடர்பான கொலையா அல்லது ஹேமாவின் கணவர் சிந்தனால் கூலிப்படையாக ஏற்பாடு செய்யப் பட்டு நடந்த கொலையா என்பது தெரிய வரும் என காவல் துறை தரப்பில் கூறப்படுகிறது.