இந்தியா

5 பாகிஸ்தான் உளவாளிகளுக்கு 14 நாட்கள் காவல்

ஐஏஎன்எஸ்

காஷ்மீர், உத்தரப்பிரதேசம், மேற்குவங்கம், டெல்லி மாநிலங் களில் பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ. உளவு அமைப்புக்காக வேவு பார்த்த பலர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களை டெல்லி குற்றப்பிரிவு போலீஸார் தங்கள் காவலில் எடுத்து விசாரித்து வருகின்றனர்.

அவர்களில் எல்லை பாதுகாப்புப் படை தலைமைக் காவலர் அப்துல் ரஷீத், ராணுவ வீரர்கள் முன்னாவர் அகமது மிர், பரீத் அகமது, காஷ்மீர் அரசுப் பள்ளி ஆசிரியர் சபர், நூலகர் கஃபைதுல்லா கான் ஆகியோரின் போலீஸ் காவல் நேற்று நிறைவடைந்தது.

இதைத் தொடர்ந்து அவர்கள் 5 பேரின் நீதிமன்ற காவலை 14 நாட்கள் நீட்டித்து டெல்லி தலைமை பெரு நகர மாஜிஸ்திரேட் சஞ்சய் கங்க் வால் உத்தரவிட்டார்.

SCROLL FOR NEXT