இந்தியா

மேற்கு வங்க தேர்தல்: காலை 9.30 மணி நிலவரப்படி 16.15% வாக்குப்பதிவு

செய்திப்பிரிவு

மேற்கு வங்கத்தில் இன்று காலை பலத்த பாதுகாப்புடன் தொடங்கிய 5-ம் கட்ட தேர்தலில் காலை 9.30 மணி நிலவரப்படி 16.15% வாக்குப்பதிவாகியுள்ளது.

மேற்கு வங்க சட்டப் பேரவைக்கு மார்ச் 27-ம் தேதி தொடங்கி, ஏப்ரல் 29-ம் தேதி வரை 8 கட்டமாக தேர்தல் அறிவிக்கப்பட்டது. இதில்4 கட்ட வாக்குப் பதிவு முடிந்துள்ளது. மாநிலத்தில் 294 தொகுதிகளில் இதுவரை 135 தொகுதிகளில் தேர்தல் முடிந்துள்ளது.

திரிணமூல் காங்கிரஸ் தலைவர் மதன் மித்ரா காமார்ஹதி வாக்குச்சாவடியில் வாக்களித்தார். முன்னதாக தக்‌ஷினேஷ்வர் காளி கோயிலில் தரிசனம் செய்துவிட்டுவந்து அவர் வாக்களித்தார். அவரை எதிர்த்து பாஜகவின் அனிந்தியா ராஜூ பானர்ஜி களம் காண்கிறார்ன். காமார்ஹதி தொகுதியில் மதன் மித்ராவுக்கு வாய்ப்பு அதிகமிருப்பதாகக் கருதப்படுகிறது.

5-ம் கட்ட தேர்தல் இன்று (ஏப் 17) நடைபெறுகிறது. ஜல்பைகுரி, கலிம்பாங், டார்ஜிலிங்புர்பா பர்தமான் ஆகிய 6 மாவட்டங்களில் உள்ள 45 தொகுதிகள் இன்று தேர்தலை சந்திக்கின்றன. 39 பெண்கள் உட்பட 319 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.

கடந்த 2016 சட்டப்பேரவை தேர்தலில் இந்த 45 தொகுதிகளில் 32-ல் திரிணமூல் காங்கிரஸும் 10-ல் காங்கிரஸ் மற்றும் இடது சாரி கட்சிகளும் வென்றன. பாஜக ஓரிடத்தில் கூட வெற்றி பெறவில்லை.

ஆனால் கடந்த மக்களவைத் தேர்தலில் இந்த 45 தொகுதிகளில் 23-ல் திரிணமூல் கட்சியும் 22-ல் பாஜகவும் அதிக வாக்குகளைப் பெற்றன. ஆனால் சதவீத அடிப்படையில் பாஜக (45%) முதலிடத்தையும் திரிணமூல் கட்சி (41.5%) இரண்டாம் இடத்தையும் பெற்றன என்பது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT