டெல்லி கிரிக்கெட் சங்க ஊழல் குற்றச்சாட்டில் மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி பதவி விலக வலியுறுத்தி அவரது வீடு முன் ஆம் ஆத்மி கட்சியினர் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.
டெல்லியின் இதயப் பகுதியில் அமைந்துள்ள ஜேட்லி வீடு முன், ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்டோர் நேற்று திரண்டனர். அவர்கள், “ஜேட்லி பதவி விலக வேண்டும், அவரை கைது செய்ய வேண்டும்” என்று கோஷம் எழுப்பினர்.
ஆம் ஆத்மி கட்சியின் எம்எல்ஏவும் முன்னாள் அமைச்சரு மான சோம்நாத் பாரதி, கட்சியின் முன்னணி தலைவர்களில் ஒருவரான திலீப் பாண்டே ஆகியோர் இந்தப் போராட்டத்துக்கு தலைமை வகித்தனர்.
போராட்டத்தில் ஈடுபட்டவர் களை தண்ணீரை பீய்ச்சியடித்து போலீஸார் விரட்டினர். மேலும் சோம்நாத் பாரதி, திலீப் பாண்டே உள்ளிட்ட பலரை கைது செய்த னர்.
ஜேட்லி தன் மீதான குற்றச்சாட்டுகளுக்கு எதிராக, டெல்லி முதல்வர் கேஜ்ரிவால் மற்றும் ஆம் ஆத்மி தலைவர்கள் மீது கடந்த திங்கள்கிழமை அவதூறு வழக்கு தொடர்ந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.