இந்தியா

ஒடிஷாவுக்கு சிறப்பு அந்தஸ்து: முதல்வர் நவீன் பட்நாயக் கோரிக்கை

செய்திப்பிரிவு

ஒடிஷாவுக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்க வேண்டும் என்று முதல்வர் நவீன் பட்நாயக் கோரிக்கை விடுத்துள்ளார்.இதுதொடர்பாக பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்த அவர் ஒடிஷா மாநிலத்துக்கு அதிக நிதி ஒதுக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.

மக்களவைத் தேர்தலோடு ஒடிஷா சட்டமன்றத்துக்கும் வாக்குப்பதிவு நடைபெற்றது. இதில் அமோக வெற்றி பெற்ற நவீன் பட்நாயக் மீண்டும் முதல்வ ரானார். அவர் பதவியேற்ற பிறகு முதல்முறையாக பிரதமர் நரேந்திர மோடியை டெல்லியில் திங்கள்கிழமை சந்தித்துப் பேசினார்.

அப்போது ஒடிஷா மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்க வேண்டும், கூடுதலாக நிதி ஒதுக்க வேண்டும் என்று பிரதம ரிடம் நவீன் பட்நாயக் கோரிக்கை விடுத்தார். மேலும் ஆந்திரா, தெலங்கானாவுக்கு இடையில் போலாவரம் அணைத் திட்டத்தைச் செயல்படுத்த வேண்டாம். இதனால் ஒடிஷாவைச் சேர்ந்த 130 கிராமங்கள் தண்ணீரில் மூழ்கி விடும் என்று பட்நாயக் சுட்டிக் காட்டினார்.

இதுகுறித்து நவீன் பட்நாயக் நிருபர்களிடம் கூறியபோது, மாநிலங்கள் வளர்ச்சி அடைந்தால்தான் இந்தியா முன்னேறும், எனது கோரிக்கை களுக்கு பிரதமர் நிச்சயம் செவிசாய்ப்பார் என்ற நம்பிக்கை உள்ளது என்று தெரிவித்தார்.

பாஜக கூட்டணியில் பிஜு ஜனதா தளம் இணையுமா என்று கேட்டபோது, இதுதொடர்பாக சிந்திக்கவில்லை என்றார்.

SCROLL FOR NEXT