இந்தியா

டெல்லியில் டீசலில் இயங்கும் எஸ்யூவி, சொகுசு கார்கள் பதிவு செய்ய மார்ச் 31 வரை உச்ச நீதிமன்றம் தடை: சுற்றுச்சூழல் மாசு அடைவதை தடுக்க நடவடிக்கை

பிடிஐ

டெல்லியில் டீசலில் இயங்கும் எஸ்யூவி வாகனங்கள், சொகுசு கார்களை புதிதாக பதிவு செய்வதற்கு மார்ச் 31-ம் தேதி உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

டெல்லியில் சுற்றுச்சூழல் மாசுப்பாடு அதிகரித்து வருவதை தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன. காற்று மிக மோசமாக மாசடைவதைத் தடுக்க ஏற்கெனவே இயற்கை எரிவாயுவில் பேருந்து உட்பட பல வாகனங்கள் இயக்கப்படுகின்றன. எனினும், டெல்லியில் சுற்றுச்சூழல் மிகவும் அபாயகரமான நிலையை எட்டி உள்ளது.

இந்நிலையில், 2000 சிசி திறன் கொண்ட டீசலில் இயங்கும் எஸ்யூவி வானங்கள் அல்லது சொகுசு கார்களை புதிதாக பதிவு செய்வதற்கு மார்ச் 31-ம் தேதி வரை உச்ச நீதிமன்றம் தடை விதித்து நேற்று உத்தரவிட்டது. மேலும் டெல்லியில் சுற்றுச்சூழலை பாதுகாக்க உச்ச நீதிமன்றம் வெளி யிட்ட உத்தரவில் கூறியிருப்ப தாவது:

$ டெல்லிக்கு வரவேண்டிய அவசியம் இல்லாத லாரிகள், தேசிய நெடுஞ்சாலை 1 மற்றும் 8-ஐ பயன்படுத்தி டெல்லிக் குள் நுழைய தடை விதிக்கப் படுகிறது.

$ சரக்குகளை ஏற்றிக் கொண்டு டெல்லிக்கு வரும் லாரிகள், சுற்றுச்சூழல் இழப்பீட்டு கட்ட ணத்தை (இசிசி) செலுத்திய பிறகு நகருக்குள் நுழைய வேண்டும். பெரிய லாரிகள் ரூ.2,600, சிறிய லாரிகள் ரூ.1,400-ம் செலுத்த வேண்டும்.

$ டெல்லியில் செயல்படும் தனியார் வாடகை கார் நிறுவனங் கள், மார்ச் 1-ம் தேதிக்குள் தங்களிடம் உள்ள பெட்ரோல் மற்றும் டீசல் கார்களை இயற்கை எரிவாயுவில் (சிஎன்ஜி) இயங்கும் வகையில் மாற்றிக் கொள்ள வேண்டும்.

$ பொதுமக்களின் நலனுக்காக டீசலில் இயங்கும் சிறிய கார்களுக்கு தடை இல்லை.

$ போக்குவரத்துப் பணிகளில் ஈடுபடும் காவலர்கள், வாகனங் கள் வெளியிடும் புகையால் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். அவர்கள் எல்லோருக்கும் மத்திய அரசு முகக் கவசம் (மாஸ்க்) வழங்க வேண்டும்.

$ டெல்லியில் குப்பைகள் மற்றும் கழிவுப் பொருட்கள் எரிப்பதை டெல்லி அரசு மற்றும் மாநகராட்சி துறையினர் நிறுத்த வேண்டும்.

$ தேசிய தலைநகர் பகுதிக்குள் கட்டிடம் கட்டுவோர் விதிமுறை களை பின்பற்றுகிறார்களா என்பதை மத்திய மாசுக்கட்டுப் பாட்டு வாரியமும் டெல்லி அரசின் மாசுக் கட்டுப்பாட்டு வாரியமும் தீவிரமாக கண்காணித்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

$ சுற்றுச்சூழல் தொடர்பாக ஏற்கெனவே தேசிய பசுமை தீர்ப் பாயம் உட்பட வேறு நீதிமன்றங் கள் வெளியிட்ட உத்தரவு களுக்கு பதில் இந்த உத்தரவு களை பின்பற்ற வேண்டும்.

இவ்வாறு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தேசிய பசுமை தீர்ப்பாய தலைவரும் நீதிபதியுமான ஸ்வதந்தர் குமார் தலைமையிலான அமர்வு நேற்று கூறும்போது, “உச்ச நீதிமன்றம் சில நெறிமுறைகளை கூறி உள்ளது. அதைப் படித்துப் பார்த்து அதன்படி முடிவுகளை எடுப்போம். நீதிமன்ற உத்தரவுப்படி செயல்பட விரும்புகிறோம்” என்றனர். மேலும் இது தொடர்பான விசாரணையை 18-ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

SCROLL FOR NEXT