இந்தியா

மும்பையில் கரோனா வைரஸ் தொற்றால் 6 லட்சம் பேர் வீட்டில் தனிமை

செய்திப்பிரிவு

மகாராஷ்டிராவில் கரோனா பரவல் தீவிரமாக உள்ளது. நேற்று முன்தினம் ஒரே நாளில் 60 ஆயிரத்துக்கும் அதிகமானோருக்கு கரோனா தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டது. பாதிக்கப்பட்டவர்களுக்கு மருத்துவமனைகளில் போதுமான இடவசதி இல்லாததால் பல்வேறு கட்டிடங்கள், வளாகங்கள் சிகிச்சை மையங்களாக மாற்றப்பட்டுள்ளன.

தலைநகர் மும்பை நகரில் மட்டும் 90 ஆயிரத்துக்கும் அதிகமானோர் கரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். போதுமான இடவசதி இல்லாததால் வீட்டிலேயே தங்களை தனிமைப்படுத்திக் கொள்ள மும்பை மாநகராட்சி நிர்வாகம் அனுமதி அளித்துள்ளது. அதன்படி, 6 லட்சத்துக்கும் அதிகமானோர் மும்பையில் தங்களை வீடுகளில் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளனர். அதேநேரம், இவர்களை கண்காணிப்பதும் மாநகராட்சிக்கு சவாலாக உள்ளது.

தொற்றால் பாதிக்கப்பட்டோர் வெளியே வராமல் இருக்க அந்த வீடுகளுக்கு சீல் வைக்கப்படுவதாகவும் மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சமீப காலங்களில் மும்பையில் வீடுகளில் தனிமைப்படுத்திக் கொண்டோர் எண்ணிக்கை மிகவும் அதிகரித்துள்ளது. இரண்டு வாரங்களுக்கு முன் 3.11 லட்சமாக இருந்த இந்த எண்ணிக்கை தற்போது வீடுகளில் தனிமைப்படுத்திக் கொண்டோர் எண்ணிக்கை 2 மடங்காக அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT