இந்தியா

தானேவில் துப்பாக்கி முனையில் பெண் பலாத்காரம்

செய்திப்பிரிவு

மும்பையின் தானே மாவட்டத்தில் உள்ள பயாந்தர் ரயில் நிலையம் அருகே ஒரு பெண்ணை ஒருவர் துப்பாக்கி முனையில் பலாத்காரம் செய்துள்ளார்.

இந்த சம்பவத்தில் தொடர்புடையதாகக் கருதப்படும் 2 பேர் மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

இதுகுறித்து நவ்கர் காவல் நிலைய துணை ஆய்வாளர் அபர்ணா வாட்கர் கூறுகையில், "மே 30-ம் தேதி மதியம் 2.30 மணி முதல் மாலை 5 மணிக்குள் பயாந்தர் ரயில் நிலையம் அருகில் உள்ள ஏடிஎம் எதிரில் இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது.

ஒருவர் துப்பாக்கியை தனது தலையில் வைத்து மிரட்டியபோது, தீபக் என்பவர் பலாத்காரம் செய்ததாக அந்தப் பெண் புகார் அளித்துள்ளார். இவர்கள் இருவரையும் தேடி வருகிறோம்" என்றார்.

SCROLL FOR NEXT