குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் பூரணமாக குணமடைந்ததை தொடர்ந்து அவர் இன்று தனது மாளிகைக்கு திரும்பினார்.
டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்துக்கு நாளை மறுதினம் இதய அறுவை சிகிச்சை நடைபெறவுள்ளது.
குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்துக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டதையடுத்து அண்மையில் டெல்லியில் உள்ள ராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அவருக்கு வழக்கமான பரிசோதனைகள் நடத்தப்பட்டு மருத்துவர்கள் கண்காணிப்பில் வைக்கப்பட்டார். 75 வயதாகும் ராம்நாத் கோவிந்தின் உடல்நிலை சீராக இருப்பதாகவும் மருத்துவர்கள் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளதாகவும் மருத்துவுமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இந்தநிலையில் குடியரசுத் தலைவர் ராம் நாத் கோவிந்த் டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனைக்கு மார்ச் 27-ம் தேதி மாற்றப்பட்டார். பரிசோதனைகளுக்கு பின்னர் பைபாஸ் சிகிச்சையை செய்துகொள்ளுமாறு மருத்துவர்கள் அவருக்கு அறிவுறுத்தினர்.
மார்ச் 30-ம் தேதி காலை அவருக்கு பைபாஸ் அறுவைச் சிகிச்சை அளிக்கப்பட்டது. இதன் பின்னர் அவர் மருத்துவமனையில் ஓய்வு எடுத்து வந்தார். குடியரசுத் தலைவரின் உடல்நிலை சீராக இருந்தபோதிலும் தொடர்ந்து மருத்துவ நிபுணர்களின் கண்காணிப்பில் இருந்து வந்தார்.
இந்த நிலையில் குடியரசுத் தலைவர் பூரணமாக குணமடைந்ததை தொடர்ந்து அவர் இன்று குடியரசுத் தலைவர் மாளிகைக்கு திரும்பினார். மருத்துவனைமயில் இருந்து புறப்பட்ட அவருக்கு சிகிச்சை அளித்த எய்ம்ஸ் மருத்துவக் குழுவினர் வழியனுப்பி வைத்தனர்.