இந்தியா

தாவூதைவிட ஆபத்தானவர் ஆசம் கான்: சிவசேனாவின் ‘சாம்னா’ தலையங்கத்தில் சாடல்

பிடிஐ

மும்பை தொடர் குண்டுவெடிப்பு வழக்கில் தேடப்படும் குற்றவாளியான தீவிரவாதி தாவூத் இப்ராகிமைவிட உத்தரபிரதேச மாநில அமைச்சரும் சமாஜ்வாடி கட்சியின் மூத்த தலைவருமான ஆசம் கான் மிகவும் ஆபத்தானவர் என்று சிவசேனா கடுமையாக சாடி உள்ளது.

இதுதொடர்பாக அக்கட்சியின் பத்திரிகையான ‘சாம்னா’வின் தலையங்கத்தில் கூறியிருப்ப தாவது:

அயோத்தியில் உள்ள பாபர் மசூதி இடிக்கப்படவில்லை என்றால் மும்பையில் குண்டு வெடித்திருக் காது என்று ஆசம் கான் ஏற் கெனவே தெரிவித்திருந்தார். இதன்மூலம் குண்டுவெடிப்புக்கு அவர் ஆதரவு தெரிவித்துள்ளார்.

பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் சமீபத்தில் தீவிரவாதிகள் கொடூர தாக்குதல் நடத்தினர். இதுகுறித்து கருத்து தெரிவித்த அவர், “சிரியா மீது ஐரோப்பிய நாடுகள் நட வடிக்கை எடுத்ததன் விளைவுதான் இந்தத் தாக்குதல்” என தீவிரவாதி களுக்கு ஆதரவாக பேசினார்.

மும்பை நிழல் உலக தாதா தாவூத் இப்ராகிம் போன்ற தீவிரவாதி களைவிட இவர்கள்தான் நாட்டுக்கு மிகவும் ஆபத்தான செயலில் ஈடு பட்டுள்ளனர். நம் நாட்டுக்குள் ளேயே இதுபோன்ற விஷத்தன்மை கொண்ட பாம்புகளும், தேள்களும் இருக்கும்போது, வெளிநாட்டு எதிரிகள் தேவையே இல்லை. பாகிஸ்தானுக்கு எதிராக போரிடுவது குறித்து பேசுவதற்கு முன்பு, ஆசம் கான் போன்றவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அசாதுதீன் ஒவைசி முஸ்லிம் கட்சியான ஏஐஎம்ஐஎம் தலைவ ராக இருந்தாலும், நாட்டு நலனுக்கு எதிராக ஒருபோதும் பேசியதில்லை. அவரிடமிருந்து ஆசம் கான் பாடம் கற்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

கடந்த அக்டோபர் மாதம் ஐ.நா. சபை பொதுச்செயலாளர் பான்-கி-மூனுக்கு ஆசம் கான் கடிதம் எழுதினார். இந்தியாவில் சகிப்பின்மை அதிகரித்துள்ளதால் இந்த விவகாரத்தில் தலையிட வேண்டும் என்று அதில் வலியுறுத்தி இருந்தார். இதையடுத்து, உள்நாட்டு பிரச்சினை தொடர்பாக ஐ.நா.வுக்கு கடிதம் எழுதிய அவரை கட்சியில் இருந்து நீக்க வேண்டும் என்று சிவசேனா வலியுறுத்தியது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT