இந்தியா

தமிழ், இந்தி மொழிகளில் தகவல்களை பதிவிடும் ஐஎஸ் ஆதரவாளர்கள்

செய்திப்பிரிவு

ஐஎஸ் தீவிரவாத ஆதரவாளர்கள் தமிழ், இந்தி உட்பட பிராந்திய மொழிகளில் தகவல்களை வெளியிட்டு வருவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இது குறித்து மாநிலங்களவை யில் நேற்று எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் மத்திய உள்துறை இணையமைச்சர் ஹரிபாய் சவுத்ரி கூறியிருப்பதாவது:

சமூக வலைதளங்களில் தமிழ், இந்தி, குஜராத்தி, உருது உட்பட பிராந்திய மொழிகளில் ஐஎஸ் தீவிரவாத ஆதரவாளர்கள் தகவல்களை வெளியிட்டு வருவ தாக உளவுத்துறை எச்சரித்துள்ளது.

இதையடுத்து இந்த விவ காரத்தை அரசு உன்னிப்பாக கவனித்து வருகிறது. ஐஎஸ் ஆதர வாளர்கள் சார்பில் ஆள் சேர்க்கும் பணிகள் நடக்கிறதா என்பதை கண்காணித்து, அவர்களை அடை யாளம் காணும்படி உளவுத் துறை மற்றும் பாதுகாப்பு ஏஜென்சி களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. ‘சைபர் ஸ்பேஸ்’ சார்பிலும் கண்காணிப்பு நடவடிக்கைகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.

இவ்வாறு அவர் கூறினார்.

SCROLL FOR NEXT