நாடுமுழுவதும் புதிதாக 1,31,968 பேருக்குக் கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. அதுபோலவே கடந்த 24 மணி நேரத்தில் கரோனா தொற்றால் 780பேர் பேர் பலியாகியுள்ளனர்.
கடந்த 24 மணி நேரத்தில் நாடு முழுவதும் ஏற்பட்ட கரோனா பாதிப்பு தொடர்பாக மத்திய சுகாதார அமைச்சகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது:
நாடுமுழுவதும் கரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்து வருகிறது. நேற்று ஒரே நாளில் 1,31,968 பேருக்குக் கரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதன் மூலம் மொத்த பாதிப்பு 1,30,60,542 கோடியாக அதிகரித்துள்ளது.
குணமடைந்தோர் எண்ணிக்கை கடந்த 24 மணிநேரத்தில் 61,899 ஆக உள்ளது. இதுவரை குணமடைந்தோர் எண்ணிக்கை 1,19,13,292ஆக உள்ளது.
ஒரே நாளில் 780 பேர் கரோனாவால் உயிரிழந்தனர். மொத்த உயிரிழப்பு 1,67,642 ஆக உள்ளது.
நாடுமுழுவதும் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 9,79,608 ஆக உயர்ந்துள்ளது.
கடந்த ஜனவரி 16-ம் தேதி நாட்டில் கரோனா தடுப்பூசி பணி தொடங்கியது. இதுவரை 9,43,34,262 பேர் கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டுள்ளனர்.
இவ்வாறு மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.