திராவக தாக்குதலுக்கு ஆளானவர் களுக்கு இழப்பீடு, புனர்வாழ்வு, இலவச சிகிச்சை உள்ளிட்ட தங்களின் முந்தைய உத்தரவைப் பின்பற்றுமாறு மாநில அரசுகள், யூனியன் பிரதேசங்களுக்கு உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
பிஹாரில் திராவக தாக்குதலால் பாதிக்கப்பட்ட ஒருவரின் வழக்கை விசாரித்த எம்.ஒய் இக்பால், நாகப்பன் ஆகியோரடங்கிய அமர்வு இவ்வாறு அறிவுறுத்தியுள்ளது.
மேலும், பாதிக்கப்பட்டவருக்கு அறுவை சிகிச்சை உட்பட இலவச சிகிச்சை அளிப்பதுடன் ரூ.10 லட்சம் இழப்பீடும் அளிக்க பிஹார் அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.