இந்தியா

கனமழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தமிழகத்துக்கு அனைத்து உதவிகளும் செய்யப்படும்: பிரதமர் நரேந்திர மோடி உறுதி

பிடிஐ, ஐஏஎன்எஸ்

கனமழை மற்றும் வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள தமிழகத்துக்கு தேவையான எல்லா உதவிகளையும் மத்திய அரசு செய்யும் என்று பிரதமர் நரேந் திர மோடி நேற்று உறுதி அளித் தார்.

தமிழகத்தில் கடந்த சில வாரங் களாக பெய்துவரும் கனமழை யால் கடலூர், சென்னை, திருவள் ளூர், காஞ்சிபுரம் ஆகிய 4 மாவட் டங்கள் கடுமையாக பாதிக்கப் பட்டுள்ளன. இதில் 180 பேர்வரை இறந்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், அகில இந்திய வானொலியில் மாதந்தோறும் ஒலி பரப்பாகும் ‘மன் கீ பாத்’ (மனதி லிருந்து…) நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசியதாவது:

தமிழகத்தில் சமீபத்தில் பெய்த கனமழை, வெள்ளத்தால் பலர் இறந்துள்ளனர். அவர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரி வித்துக் கொள்கிறேன்.

இந்த பாதிப்பில் இருந்து தமி ழகம் விரைவில் மீண்டு எழும் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது. மழை வெள்ள பாதிப்புகளை மத்திய அரசு குழுவினர் ஆய்வு செய்து வருகின்றனர். பாதிப்பை சீர்செய்ய தேவையான அனைத்து உதவி களையும் மத்திய அரசு செய்யும்.

வலிமையான ஒரே இந்தியா

கடந்த அக்டோபர் 31-ம் தேதி சர்தார் வல்லபாய் படேலின் நூற்றாண்டு தின விழாவில் குறிப்பிட்டபடி, நாட்டின் ஒருமைப் பாடு, நல்லிணக்கத்துக்காக ‘ஒரே இந்தியா; வலிமையான இந்தியா’ திட்டம் அமல்படுத்தப்படும். இதற் கான லோகோ, வடிவமைப்பு, இதில் பொதுமக்கள் அதிகளவில் பங்கேற்க என்ன செய்யலாம் என்பது குறித்த ஆலோசனை களை (‘MyGov.com’ என்ற இணைய தளத்துக்கு) மக்கள் வழங்க வேண்டும். குறிப்பாக, நாட்டில் உள்ள ஒவ்வொருவரையும் இந்த திட்டத்தின் மூலம் தொடர்பு படுத்துவது எப்படி என்று ஆலோ சனை வழங்குங்கள்.

உறுப்பு தானம் பற்றி முன்பு பேசியிருந்தேன். அதன்பிறகு இப்போது உறுப்பு தானம் குறித்த விழிப்புணர்வு அதிகரித்துள்ளது.

மாற்றுத் திறனாளிகள் பல சாதனைகளை படைத்து வருகின்றனர். உடல் ரீதியாக குறை கள் இருந்தாலும் மற்றவர்களுக்கு ஊக்க சக்தியாக அவர்கள் திகழ் கின்றனர்.

கடந்த 1996-ம் ஆண்டு காஷ் மீரில் தீவிரவாதிகள் துப்பாக்கி யால் சுட்டதில் ஜாவீத் அகமது ஊனமடைந்தார். அவரால் நிற்க முடியாது. எனினும், கடந்த 20 ஆண்டுகளாக குழந்தைக ளுக்கு கல்வி கற்றுக் கொடுத்து சிறந்த சேவை செய்து வருகிறார். அத்துடன் மாற்றுத் திறனாளி களுக்கு தேவையான வசதிகளை மேம்படுத்த பல வழிகளில் பணி யாற்றி வருகிறார். டிசம்பர் 3-ம் தேதி மாற்றுத் திறனாளிகள் தினம். அன்றைய தினம் இவருடைய பணியை அங்கீகரித்து கவுரவிக்கப் படும். ஜாவீத் அகமது போன்ற மாற்றுத் திறனாளிகள் நமக்கு உந்து சக்தியாக விளங்குகிறார்கள்.

வெப்பமயமாதல்

புவி வெப்பமயமாதல் காரண மாக, உலகின் பல்வேறு பகுதி களில் இயற்கை பேரழிவுகள் தொடர்கதையாகி வருகின்றன. மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்தினால், புவி வெப்ப மயமாதலை தடுக்கலாம். அதற் காக எல்இடி பல்புகளை பயன் படுத்துங்கள்.

இதற்காக, சாமானிய மனிதர்கள் கூட ஏதாவது ஒரு வழியில் தங்கள் பங்களிப்பை வழங்கி வருகின்ற னர். கான்பூரை சேர்ந்த அதிகம் படிக்காத நூர்ஜகான் என்பவர், சூரியசக்தி விளக்குகள் தயாரிக் கும் தொழிற்சாலையை நிறுவி இருக்கிறார். அந்த விளக்குகளை 500 வீடுகளுக்கு மாதம் ரூ.100-க்கு வாடகையாக தந்துள்ளார். இதன் படி, ஒரு நாளைக்கு 3-4 ரூபாய்தான் செலவு. ‘உலகத்துக்கு ஒளி’ என்ற இவரது பங்களிப்பு மற்றவர்களுக்கு ஊக்கமாக இருக்க வேண்டும். இவ்வாறு மோடி பேசினார்.

SCROLL FOR NEXT