இந்தியா

தென்னிந்தியாவில் மட்டும் ஐஎஸ் ஆதரவாளர்கள் 150 பேர்

ஜோஷி ஜோசப்

இஸ்லாமிக் ஸ்டேட் என்ற ஐஎஸ் தீவிரவாத அமைப்புக்கு தென்னிந்தியாவில் மட்டும் 150 ஆதரவாளர்கள் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

பயண ஆவணங்களை தயாரிப்பதற்காக ஒரே குடும்பத்தைச் சேர்ந்த சகோதர-சகோதரிக்கு மர்மமான முறையில் ரூ.50,000 அளிக்கப்பட்டது, ஒரு எம்.பி.ஏ பட்டதாரி மற்றும் இவரது மனைவி, ஒரு கூகுள் ஊழியர், போலீஸாரால் சுட்டுக் கொல்லப்பட்ட சிமி அமைப்புத் தொண்டர் ஒருவரின் சகோதரர் மற்றும் பல பொறியியல் மாணவர்கள்.

இந்திய உளவு அமைப்பினர் கண்காணிப்பில் இருக்கும் ஐஎஸ் ஆதரவாளர்களிடையே ஒரு குறிப்பிட்ட பாணி இருப்பதாக தெரியவில்லை. இவர்கள் தென்னிந்தியாவைச் சேர்ந்தவர்கள் மற்றும் பலர் பொறியியல் படிப்பு பின்னணி உடையவர்கள் என்பது தவிர ஐஎஸ் ஆதரவாளர்களிடையே ஒரு குறிப்பிட்ட பாங்கு இருப்பதாகத் தெரியவில்லை.

கண்காணிப்பில் இருக்கும் 150 பேர்களில் தெலுங்கானாவிலிருந்து மட்டும் 18 பேர் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழகத்திலிருந்தும் குறிப்பிடத்தகுந்த எண்ணிக்கை இருப்பதாகத் தெரிகிறது.

குறிப்பாக தெலுங்கானாவில் 21 வயது மத்தியதர வர்க்க நபர் ஒருவர் ஐஎஸ் அமைப்பில் இணைய மற்றவர்களைத் தூண்டுவதில் முக்கியமானவராகக் கருதப்படுகிறார். இவர் தனது சகோதரியையே தன் முயற்சியால் ஐஎஸ் ஆதரவுக்கு இணைத்துள்ளார். இவர் சிரியாவுக்கு நர்ஸாகச் செல்லக்கூட ஆயத்தமாக இருப்பதாக தகவல். இவர்களது ரகசிய வாழ்க்கை பற்றி பெற்றோருக்கு ஒன்றும் தெரியவில்லை என்று கூறப்படுகிறது.

இதே போல் மேலும் ஒரு 4 நபர்கள் மீது சந்தேகம் எழுந்துள்ளது.

SCROLL FOR NEXT