இந்தியா

மாவோயிஸ்ட்டுகளுக்கு எதிரான தாக்குதல் தீவிரமாகும்; வெற்றி கிடைக்கும் வரை தொடரும்: அமித் ஷா திட்டவட்டம்

செய்திப்பிரிவு

மாவோயிஸ்ட்டுகளுக்கு எதிரான பதிலடி தாக்குதல் தீவிரப்படுத்தப்படும், வெற்றி கிடைக்கும் வரை இந்த போர் நடைபெறும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறினார்.

சத்தீஸ்கர் மாநிலம் பிஜப்பூர்- சுக்மா மாவட்ட எல்லையில் உள்ள வனப்பகுதியில் மாவோயிஸ்டுகளுக்கு எதிரான தேடுதல் வேட்டையில் பாதுகாப்பு படையினர் ஈடுபட்டிருந்தனர். சிஆா்பிஎஃப் கமாண்டோ பிரிவு, மாவட்ட ஆயுத காவல்படை, சிறப்பு அதிரடிப் படை உள்ளிட்ட படைப் பிரிவுகளைச் சோ்ந்த வீரா்கள் கூட்டாக மிகப் பெரிய அளவில் நேற்று தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டனா்.

அப்போது அடர்ந்த வனப்பகுதிக்குள் மறைந்திருந்த மாவோயிஸ்டுகள், பாதுகாப்புப் படையினரை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தினா். உடனடியாக பாதுகாப்புப் படையினரும் பதிலடி கொடுத்தனா்.

இந்த மோதலில் பாதுகாப்புப் படை வீரா்கள் 5 போ் உயிரிழந்ததாக முதலில் தகவல் வெளியாகின. தேடுதல் வேட்டையில் ஈடுபட்ட பல வீரர்களில் காணாமல் போயுள்ளனர். இதனால் உடனடியாக கூடுதல் படைகள் அந்த பகுதிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு உயர் போலீஸ் அதிகாரிகள் விரைந்தனர். தாக்குதல் பகுதியில் இருந்து அடுத்தடுத்து உடல்கள் மீட்கப்பட்டன.

இந்த தாக்குதலில் 22 வீரர்கள் கொல்லப்பட்டனர். 15 பேர் காயமடைந்தனர். னா். 15 -பேர் காயம் அடைந்தனர். காயம் அடைந்த வீரர்கள் அனைவரும் மீட்கப்பட்டு உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

உயிரிழந்த வீரர்களுக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா இரங்கல் தெரிவித்து இருந்தார். இதனைத் தொடர்ந்து அவர் சத்தீஸ்கர் மாநிலம் ஜெகதல்பூருக்கு இன்று வந்தார்.

மாவோயிஸ்ட்களால் கொல்லப்பட்ட 22 வீரர்களின் உடல்களுக்கு மலர் வளையம் வைத்து மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா அஞ்சலி செலுத்தினார். அவருடன் சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் பாகலும் உடன் சென்றார். பின்னர் நிலவரம் குறித்து துணை ராணுவப்படை அதிகாரிகளுடன் அவர் ஆலோசனை நடத்தினர்.

பின்னர் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறியதாவது:

மாவோயிஸ்ட்டுகள் தாக்குதலில் உயிரிழந்த வீரர்களுக்கு நாட்டு மக்கள், மத்திய அரசு, பிரதமர் மோடி சார்பில் அஞ்சலி செலுத்தினேன். அவர்களின் தியாகத்தை இந்த நாடு எப்போதும் நினைவில் வைத்திருக்கும்.

கடந்த சில ஆண்டுகளாகவே அடர்ந்த வனப்பகுதிகளுக்குள் அதிரடிப்படை முகாம்களை அமைத்துள்ளோம். இது மாவோயிஸ்ட்டுகளை எரிச்சலுட்டியுள்ளது.

இதன் காரணமாகவே இதுபோன்ற தாக்குதல்கள் நடக்கின்றன. மாவோயிஸ்ட்டுகளுக்கு எதிரான பதிலடி தாக்குதல் தீவிரப்படுத்தப்படும், வெற்றி கிடைக்கும் வரை இந்த போர் நடைபெறும். இதனை நாட்டு மக்களுக்கு உறுதியுடன் கூறிக் கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

SCROLL FOR NEXT