இந்தியா

அதிகரிக்கும் கரோனா: மகாராஷ்டிரா, பஞ்சாப், சத்தீஸ்கரில் மத்திய குழு ஆய்வு

பிடிஐ

கரோனா தொற்று அதிகரித்துவரும் மகாராஷ்டிரா, பஞ்சாப், சத்தீஸ்கர் மாநிலங்களில் மத்தியக் குழு ஆய்வு மேற்கொள்கிறது.

முன்னதாக நேற்று பிரதமர் மோடி தலைமையில் நடந்த கூட்டத்தில் கரோனா வேகமெடுக்கும் மாநிலங்களுக்கு பொது சுகாதார நிபுணர்கள், மருத்துவர்கள் அடங்கிய மத்தியக் குழுவை அனுப்புவது என்று முடிவு செய்யப்பட்டது.

பிரதமர் அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில், சமூக விலகலைக் கடைபிடிக்காதது மற்றும் முகக்கவசம் அணிவதில் காட்டப்பட்ட மெத்தனமே கரோனா மீண்டும் வேகமெடுக்கக் காரணம் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையின் தலைமை மருத்துவர் ரன்தீப் குலேரியா கூறும்போது, "கரோனா மீண்டும் வேகமெடுக்க மரபணு மாற்றமடைந்த வைரஸும் ஓரளவுக்குக் காரணம். கரோனா கட்டுப்பாட்டுப் பகுதிகளை முன்புபோல் தீவிரமாக கண்காணித்தல், பரிசோதனை, தொடர்பு கண்டறிதல், தனிமைப்படுத்துதல் ஆகியவற்றைத் தீவிரப்படுத்துதல் பரவலைக் கட்டுக்குள் கொண்டுவரும்" என்றார்.

நாட்டின் கரோனா எண்ணிக்கையில் 57% பங்களிக்கும் மகாராஷ்டிராவில் இரவு 8 மணி முதல் காலை 7 மணி வரை ஊரடங்கு அமல்படுத்தப்படுவுதாக அறிவிக்கப்பட்டுள்ளது. உணவு விடுதிகள், தியேட்டர்கள் மால்கள், மதுபான விடுதிகள், மூடப்படுகிறது. வார இறுதி நாட்களில் அத்தியாவசிய சேவை தவிர மற்ற அனைத்திற்கும் தடை விதிக்கப்பட்டு முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது.

பஞ்சாப் மாநிலத்தில் கடந்த 14 நாட்களில் பஞ்சாப் மாநிலத்தில் மட்டும் ஒட்டுமொத்த தொற்று பரவலில் 4.5% ஏற்பட்டுள்ளது.

பரிசோதானை, தொற்று தொடர்பு கண்டறிதல், சிகிச்சை, கோவிட் தற்காப்பு நடவடிக்கைகள் மற்றும் தடுப்பூசி என 5 வழிமுறைகளைத் தீவிரமாகப் பின்பற்ற அரசாங்கம் வலியுறுத்தியுள்ளது.

SCROLL FOR NEXT