டெல்லியில் இளம்பெண் பலாத் காரம் செய்யப்பட்ட சம்பவத்தில் குற்றவாளியான உபேர் கால் டாக்ஸி ஓட்டுநருக்கு ஆயுள் தண் டனை மற்றும் அபராதம் விதித்து டெல்லி நீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்தது.
கடந்த ஆண்டு டிசம்பர் 5-ம் தேதி, குர்காவ்னில் தனியார் நிறு வனத்தில் நிதிப்பிரிவில் பணி யாற்றும் 25 வயது பெண், பணி முடிந்து உபேர் கால் டாக்ஸியில் வீடு திரும்பும்போது அந்த கால் டாக்ஸியின் ஓட்டுநரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார்.
இதுதொடர்பான புகாரில் அந்தக் காரின் ஓட்டுநர் ஷிவ்குமார் யாதவ் (32) கைதுசெய்யப்பட்டார். இவ்வழக்கு, டெல்லி விரைவு நீதிமன்றத்தில் நடந்தது. விசாரணை முடிவில், கூடுதல் அமர்வு நீதிமன்ற நீதிபதி காவேரி பவேஜா, ஓட்டுநர் ஷிவ்குமார் யாதவ் குற்றவாளி என கடந்த அக்டோபர் 20-ம் தேதி அறிவித்தார்.
இந்நிலையில் தண்டனை விவரம் நேற்று அறிவிக்கப்பட்டது. அப்போது, குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளிப்பதாக நீதிபதி காவேரி பவேஜா தெரிவித்தார்.
“குற்றவாளிக்கு ஆயுட்கால கடுங்காவல் தண்டனை விதிக் கிறேன். அவர் தனது எஞ்சிய வாழ் நாள் முழுவதையும் சிறையில் கழிக்க வேண்டும். மேலும், ரூ.21 ஆயிரம் அபராதம் செலுத்த வேண் டும்” என நீதிபதி உத்தரவிட்டார்.
மேலும், பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு இழப்பீடு வழங்கவும், குற்றவாளியின் குடும்பத்தைக் கவனித்துக் கொள்ளவும் டெல்லி சட்ட சேவைகள் ஆணையத்துக்கு உத்தரவிட்டார்.
திஹார் சிறையில் அடைக்கப் பட்டிருந்த ஷிவ்குமார் யாதவ் நேற்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத் தப்பட்டார். தீர்ப்பைக் கேட்ட அவர் அதிர்ச்சியடைந்தார். நீதிமன்றத் துக்கு நேற்று வந்திருந்த அவரது குடும்பத்தினரும் ஏமாற்றம் அடைந்தனர்.