தமிழகத்தின் வைப்பாறுடன் கேரளத்தின் பம்பை, அச்சன்கோவில் ஆற்றை இணைக்க கேரளா மாநிலம் எதிர்ப்புத் தெரிவித்துள்ளது.
கேரள சட்டமன்றத்தில் நீர்வளத்துறை அமைச்சர் பி.ஜே.ஜோசப் கூறியதாவது: “தேசிய நீர்வள மேம்பாட்டு முகமை கேரளத்தின் பம்பை, அச்சன்கோவில் ஆறுகளை தமிழகத்தின் வைப்பாறுடன் இணைக்க யோசனை தெரிவித்துள்ளது.
பம்பை, அச்சன்கோவில் ஆறுகளின் நீர், விவசாய மற்றும் பாசன பயன்பாட்டிற்கே சரியாக உள்ளது. தேவைக்கு அதிகமாக நீர் இருப்பதில்லை. இது தொடர்பாக வல்லுநர் குழு ஒன்று ஏற்கெனவே அறிக்கை சமர்ப்பித்துள்ளது. எனவே, நதிகளை இணைப்புத் திட்டம் சாத்தியமில்லை.
இந்நதிகளை இணைக்கும் யோசனைக்கு கேரள அரசு எதிர்ப்புத் தெரிவித்துள்ளது” என்றார்.