கர்நாடக சுகாதாரத் துறை அமைச்சர் சுதாகர் பெங்களூருவில் செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது:
பெங்களூருவில் கரோனா தொற்று அதிகரித்து வருவதால்அரசும் மாநகராட்சி நிர்வாகமும்பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. கடந்த இரு வாரங்களில் கரோனாபாதித்த 10 ஆயிரம் பேரில் 60 சதவீதம் பேர் வெளிமாநிலங்களுக்கு சென்று வந்தவர்கள் என்பது தெரியவந்துள்ளது.
எனவே, ஏப்ரல் 1-ம் தேதி முதல் வெளிமாநிலங்களில் இருந்து பெங்களூரு வருவோருக்கு தங்களுக்கு கரோனா தொற்று இல்லை என்பதற்கான ஆர்.டி. - பி.சி.ஆர் சோதனை சான்றிதழ் கட்டாயம் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.
இந்நிலையில், தமிழகம், புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் கரோனா தொற்று குறைவாக இருக்கிறது. அங்கு ஏப்ரல் 6-ம் தேதி தேர்தல் நடைபெறுவதால் கர்நாடக அரசின் இந்த உத்தர வால் வாக்களிக்க செல்வதில் அந்த மாநிலங்களைச் சேர்ந்தமக்களுக்கு தயக்கம் ஏற்பட் டுள்ளது.
தமிழகம், புதுச்சேரி, ஆந்திரா,தெலங்கானா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து வருவோருக்கு கரோனா ‘நெகட்டிவ்' சான்றிதழ் தேவையில்லை. அதே வேளையில் கரோனா தொற்று அதிகமாக உள்ள கேரளா, மகாராஷ்டிரா, பஞ்சாப், சண்டிகர் உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து வருவோர் அந்த சான்றிதழ் கொண்டு வர வேண்டியது கட்டாயம்.
சான்றிதழ் இல்லாமல் பெங்களூருவுக்குள் நுழை வோருக்கு எல்லையில் கரோனா பரிசோதனை மேற்கொள்ளப் படும். இவ்வாறு சுதாகர் கூறினார்.