கேரள மாநிலம் கொச்சியில் பாஜக சார்பில் நேற்று பொதுக் கூட்டம் நடைபெற்றது. இதில் மத்திய ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் பேசியதாவது:
கேரளாவில் ஆளுங்கட்சியாக உள்ள இடதுசாரி ஜனநாயக முன்னணி ஊழலில் திளைத்து வருகிறது. தங்கக் கடத்தலில் மாநில அரசுக்கு தொடர்புள்ளதாக கூறப்படுகிறது. இதனால் அரசு மீது மக்கள் அதிருப்தியில் உள்ளனர். இவர்களின் அரசியல் ஆதா
யத்துக்காக கேரளாவில் இந்து மக்கள் துன்புறுத்தலுக்கு உள்ளாகின்றனர். இதனை ஒருபோதும் ஏற்க முடியாது. சபரிமலை விவகாரமே இதற்கு நல்ல உதாரணம்.
இத்தனை களங்கத்தை சுமந் திருக்கும் இடதுசாரிகளுக்கு தேர் தலில் மக்கள் பாடம் கற்பிக்க வேண்டும். அனைவருக்குமான சம வளர்ச்சியை முன்னெடுக்கும் கட்சியான பாஜகவுக்கு மக்கள் வாக்களிக்க வேண்டும்.
கேரளாவில் பாஜக ஆட்சிக்கு வந்தால், பல்வேறு நலத்திட்டங்கள் நிச்சயம் செயல்படுத்தப்படும். குறிப்பாக இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு அதிகரிக்கப்படும். மேலும், இந்திய நாட்டின் பாதுகாப்பை பலப்டுத்தும் குடியுரிமை திருத்தச் சட்டத்தை கேரள மாநிலத்தில் பாஜக கண்டிப்பாக அமல்படுத்தும். இந்தச் சட்டத்தால் உண்மையான இந்தியர்களுக்கு எந்த பாதிப்பும் வராது என்று உறுதியாக கூறுகிறேன். இவ்வாறு பியூஷ் கோயல் கூறினார்.