உத்தரப் பிரதேசத்தில் பிடிபட்ட பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ. உளவாளி முகமது இஜாஸை 14 நாட்கள் காவலில் வைக்க மீரட் நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது. இதைத் தொடர்ந்து அவர் அங்குள்ள சிறையில் அடைக்கப்பட்டார்.
இஸ்லாமாபாத்தை சேர்ந்த இஜாஸ் இந்தியாவுக்குள் ஊடுருவி ராணுவ முகாம்களை உளவு பார்த் துள்ளார். கடந்த வெள்ளிக்கிழமை மீரட் நகர் கன்டோன்மென்ட் பகுதியில் இருந்து டெல்லிக்கு அவர் புறப்பட்டபோது உ.பி. அதிரடிப் படையினர் கைது செய்தனர்.
இதைத் தொடர்ந்து நேற்று முன்தினம் அவர் மீரட் சிறப்பு தலைமை ஜூடிசியல் மாஜிஸ்திரேட் சஞ்சய் சிங் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டார். அவரை 14 நாட்கள் காவலில் வைக்க மாஜிஸ்திரேட் உத்தரவிட்டார்.
முகமது இஜாஸை 7 நாட்கள் தங்கள் காவலில் எடுத்து விசாரிக்க அதிரடிப் படை போலீஸார் திட்டமிட்டுள்ளனர்.