இந்தியா

ஷீனா போரா கொலை வழக்கில் இந்திராணியின் கணவர் பீட்டர் முகர்ஜி கைது

செய்திப்பிரிவு

1,000 பக்க குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தது சிபிஐ

ஷீனா போரா கொலை வழக்கில் இந்திராணியின் கணவர் பீட்டர் முகர்ஜியை சிபிஐ அதிகாரிகள் நேற்று கைது செய்தனர்.

கடந்த 2012-ம் ஆண்டு ஏப்ரல் 24-ம் தேதி ஷீனா போரா கொலை செய்யப்பட்டுள்ளார். இவரது உடல் பாகங்கள் ராய்கட் வனப்பகுதியில் பாதி எரிக்கப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டது.

இந்நிலையில், ஷீனாவின் தாயும் ஸ்டார் இந்தியா டிவி முன்னாள் சிஇஓ பீட்டர் முகர்ஜியின் மனைவியுமான இந்திராணி முகர்ஜியின் (43) முன்னாள் கார் ஓட்டுநர் ஷ்யாம்வர் ராய் துப்பாக்கி வைத்திருந்ததாக கடந்த ஆகஸ்ட் மாதம் கைது செய்யப்பட்டார். அவரிடம் நடத்திய விசாரணையில் ஷீனாவை இந்திராணி கொலை செய்ததாக ஒப்புக்கொண்டார்.

இதையடுத்து, இந்திராணி, அவரது 2-வது கணவர் சஞ்சீவ் கண்ணாவையும் கைது செய்தனர். மூவரும் மும்பை சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இதுதொடர்பாக மும்பை போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

வனப்பகுதியிலிருந்து கண் டெடுக்கப்பட்ட எலும்பு, மண்டை ஓடு ஆகியவற்றை டிஎன்ஏ பரி சோதனை செய்த மும்பை போலீஸார், அவை ஷீனாவுடையது தான் என செப்டம்பர் மாதம் உறுதி செய்தனர். இந்நிலையில் இந்த வழக்கு சிபிஐ வசம் ஒப்படைக்கப் பட்டது. இதையடுத்து, அந்த உடல் பாகங்கள் மற்றும் இந்திராணியின் ரத்த மாதிரி ஆகியவற்றை தடயவியல் பரிசோதனைக்காக எய்ம்ஸுக்கு அனுப்பி வைத்தது.

இந்த சோதனை முடிந்து விட்ட தாகவும், டிஎன்ஏ பரிசோதனையில் இந்திராணியின் ரத்த மாதிரி, ஷீனாவின் எலும்பிலிருந்து எடுக்கப் பட்ட புரோட்டீனுடன் ஒத்துப் போவ தாக தகவல்கள் கூறுகின்றன. எனவே, அந்த உடல் ஷீனாவுடை யதுதான் என உறுதி செய்யப்பட் டுள்ளது.

ஷீனா போரா கொலை வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட் டுள்ள இந்திராணியின் ஓட்டுநர் ஷ்யாம் ராயின் வாக்குமூலம் மும்பை நீதிமன்றத்தில் பதிவு செய்யப்பட்டது.

மேலும் ஷீனா போரா கொலைவழக்கில் 1,000 பக்கங்களைக் கொண்ட குற்றப் பத்திரிகையை சிபிஐ தாக்கல் செய்துள்ளது.

இதற்கிடையில் ஷீனா போரா கொலை வழக்கில் இந்திராணியின் மூன்றாவது கணவர் பீட்டர் முகர்ஜியை சிபிஐ அதிகாரிகள் நேற்று இரவு கைது செய்தனர். அவரிடம் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில் ஏற்கெனவே பீட்டர் முகர்ஜியிடம் சிபிஐ அதிகாரிகள் தொடர்ந்து 5 நாட்கள் தீவிர விசாரணை நடத்தியது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT