பங்குனி உத்திரத்தை முன்னிட்டு வெற்றி வேல்! வீர வேல் எனக் கூறி தமிழக மக்களுக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா வாழ்த்து தெரிவித்துள்ளார்.
பங்குனி உத்திரத்தை முன்னிட்டு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தனது ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார். அவரது வாழ்த்துச் செய்தி:
தமிழ்நாட்டின் சகோதர சகோதரிகளுக்கு வணக்கம்!
இறைவன் முருகன் அருளால் அனைவருக்கும் அமைதி, மகிழ்ச்சி செழித்திட இந்த புனித நாளில் எனது அன்பான "பங்குனி உத்திரம்" திருநாள் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
வெற்றி வேல்! வீர வேல்!
இதுபோலவே பாஜக தலைவர் ஜே.பி.நட்டாவும் வாழ்த்து தெரிவித்துள்ளார். அவரது ட்விட்டர் பதிவு:
தமிழக சகோதர சகோதரிகளுக்கு புனித பண்டிகை பங்குனி உத்திரம் நன்னாளில் இதயப்பூர்வமான வாழ்த்துக்கள். இந்த திருவிழா தெய்வீக திருமணங்களின் புனித பவுர்ணமி. தமிழக மக்கள் எல்லாம் வலமும் பெற்று உடல் ஆரோக்கியத்துடன் வாழ எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.
வேல் வேல் வெற்றி வேல்
இவ்வாறு ஜே.பி.நட்டா கூறியுள்ளார்.