இந்தியா

முகேஷ் அம்பானிக்கு மிரட்டல் விவகாரம்: 5 செல்போன்களை அழித்த போலீஸ் அதிகாரி சச்சின் வாஸ்

செய்திப்பிரிவு

ரிலையன்ஸ் குழும தலைவர் முகேஷ் அம்பானியின் மும்பை வீடு அருகே வெடிபொருட்களுடன் கார் ஒன்று கண்டுபிடிக் கப்பட்டது.

இந்த வழக்கில் தொடர்புடைய போலீஸ் அதிகாரி சச்சின் வாஸை தேசிய புலனாய்வு அமைப்பு (என்ஐஏ) கைது செய்து விசாரித்து வருகிறது.

இந்நிலையில், முகேஷ் அம்பானி வீட்டருகே இருந்த கார் வர்த்தகர் மான்சுக் ஹிரனுடையது, அதை சச்சின் வாஸ் பயன்படுத்தியது தெரிந்தது. அதற்குள் ஹிரன் மர்மமான முறையில் நீரோடையில் இறந்து கிடந்தார். அவரது உடல் கிடைக்க பெற்ற அதே தினத்தில் 5 செல்போன்களை போலீஸ் அதிகாரி சச்சின் வாஸ் அழித்துள்ளார் என்ற தகவல்கள் தற்போது நடந்த விசாரணையில் அம்பலமாகியுள்ளன. ஏன் அந்த செல்போன்களை அவர் அழித்தார் என்று என்ஐஏ அதிகாரிகள் விசா ரணை மேற்கொண்டுள்ளனர்.

மேலும் சச்சின் வாஸ் 13 செல் போன்களை பயன்படுத்தி வந்ததும் தெரிய வந்துள்ளது. அவரது அதிகாரப்பூர்வ செல்போனில் இருந்து விவரங்களைச் சேரிக்க நிபுணர்களை என்ஐஏஅதிகாரிகளை வரவழைத் துள்ளனர்.

அது மட்டுமல்லாமல் இந்த வழக்கில் 3 போலீஸ் அதிகாரிக்கு சம்மன் அனுப்பவும் என்ஐஏ முடிவு செய்துள்ளது.

SCROLL FOR NEXT