இந்தியா

ஐ.நா. அமைதிக் குழுவுக்கு 2 லட்சம் கரோனா தடுப்பூசிகள் : இன்று அனுப்பி வைக்கப்படும்: மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் தகவல்

செய்திப்பிரிவு

ஐ.நா. பாதுகாப்புக் கவுன்சிலின் திறந்தவெளி விவாதக் கூட்டத்தில் மத்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் காணொலி மூலம் கலந்துகொண்டு பேசியயதாவது:

ஐ.நா. அமைதிக் குழுவுக்கு இந்தியாவின் பரிசாக 2 லட்சம் கரோனா தடுப்பூசிகள் அனுப்பப்படும் என்று கடந்த பிப்ரவரியிலேயே அறிவித்திருந்தோம். அதன்படி இந்த மருந்துகள் நாளை (மார்ச் 27) அனுப் பப்படுகின்றன.

மற்றவர் நலனுக்கு உதவ வேண்டும் என்று எப்போதும் மனதில் வைத்து உங்கள் வேலையைச் செய்ய வேண்டும் என்ற பகவத் கீதையின் சொற்படி நாங்கள் செய்து வருகிறோம். இவ்வாறு அவர் பேசினார்.

ஐ.நா. சபை நடத்தும் அமைதிக் குழு பயணத் திட்டங்களில் 85,782 பேர் பணியாற்றி வருகின்றனர். உலகம் முழுவதும் அமைதி பணிகளுக்காக 12 குழுக்கள் பணியாற்றி வருகின்றன. இந்த ஐ.நா. அமைதிக் குழுவில் 121 நாடுகள் உள்ளன. இதில் இந்தியாவைச் சேர்ந்த ஏராளமானோர் பணியாற்றி வருகின்றனர்.

இந்த 2 லட்சம் தடுப்பூசிகள் மும்பை வழியாக, கத்தார் ஏர்வேஸ் விமானத்தில் கோபன்ஹேகன் நகருக்கு எடுத்துச் செல்லப்பட்டு அங்கு பாதுகாத்து வைக்கப்படும். பின்னர் ஐ.நா. அமைதிக் குழு வில் பணியாற்றுபவர்களுக்கு தடுப்பூசி போடப்படும் என்று தெரியவந்துள்ளது.

SCROLL FOR NEXT