மத்திய அரசு கொண்டு வந்துள்ள 3 புதிய வேளாண் சட்டங்களை எதிர்த்து விவசாய சங்கங்கள் நடத்தி வரும் போராட்டம் 4 மாதங்களை நிறைவு செய்துயுள்ளது.
விவசாயிகளுக்கு ஆதரவாக ட்விட்டரில் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி வெளியிட்ட பதிவில் கூறும்போது, ‘‘அட்டூழியம், ஆணவம், அநீதி ஆகியவற்றை சத்யாகிரகம் முறியடிக்கும் என்று இந்திய வரலாற்றுச் சம்பவங்கள் நமக்கு எடுத்துக் காட்டுகின்றன. விவசாயிகள் இன்று நடத்திய பாரத் பந்த் போராட்டத்துக்கு எனது முழு ஆதரவு உள்ளது. இந்த விவசாயிகள் போராட்டம் தேசத்தின் பாதுகாப்புக்காகவும், அமைதியாகவும் நடத்தப்பட வேண்டும்’’ என்று கூறியுள்ளார்.
கடந்த ஆண்டு நவம்பரில் டெல்லி எல்லையான சிங்கு, காஜிப்பூர், டிக்ரி ஆகிய பகுதிகளில் விவசாயிகள் போராட்டத்தை தொடங்கினர்.