பிஹாரில் புதிய அரசு நேற்று பதவியேற்றது. இதில் ராஷ்ட்ரீய ஜனதா தளத் தலைவர் லாலு பிரசாத் தின் மகன் தேஜ் பிரதாப் யாதவ் அமைச்சராகப் பதவியேற்றார்.
அவர் பதவி பிரமாணம் ஏற்கும் போது வார்த்தை உச்சரிப்பில் தவறு செய்ததால் மீண்டும் பிரமாணம் எடுத்துக் கொள்ளும்படி ஆளுநர் ராம்நாத் கோவிந்த் உத்தரவிட்டார்.
லாலு பிரசாத் யாதவின் மூத்த மகன் தேஜ் பிரதாப். அரசியல் அனுபவம் இல்லாதவர். நிதிஷ் குமார் அரசில் பதவி ஏற்பின்போது 3-வது ஆளாக அவர் பதவி பிரமாணம் எடுத்துக்கொண்டார்.
பிரமாணம் எடுத்துக் கொள்ளும் போது அபேக்ஷித் (எதிர்பார்ப்புகள்) என்று சொல்ல வேண்டியதை உபேக்ஷித் (புறக்கணிக்கப்பட்ட) என்று குறிப்பிட்டார். இதை சுட்டிக் காட்டி மீண்டும் பிரமாணம் எடுத்துக் கொள்ளும்படி ஆளுநர் கூறினார். ஆனால் அடுத்த முயற்சியிலும் அவர் ஒரு வார்த்தையை உச்சரிப் பதில்தடுமாற்றம் அடைந்தார்.
தேஜ் பிரதாப் யாதவுக்கு இன்று 28 வயது பூர்த்தியாகிறது. இவரது தம்பியான 26 வயது தேஜஸ்வி யாதவுக்கு துணை முதல்வர் பதவி வழங்கப்பட்டுள்ளது.
இருவருமே முதல் முயற்சி யிலேயே தேர்தலில் வெற்றிபெற்று அமைச்சர்களாகி உள்ளனர். கடந்த ஆண்டு பொதுத்தேர்தலில் பிரச் சாரத்தில் கடுமையாக உழைத்தவர் தேஜஸ்வி. அதனால் அவர் லாலு வின் வாரிசாக கருதப்படுகிறார்.
லாலுவின் மூத்த மகளான மிசா பாரதி மக்களவைத் தேர்தலில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார். அவரும் 2 சகோதரிகளுடன் நிதிஷ் பதவி ஏற்பு நிகழ்ச்சியில் பங் கேற்றார். லாலுவுக்கு மொத்தம் 9 பிள்ளைகள். அவர்களில் மிசா பாரதி, தேஜ் பிரதாப், தேஜஸ்வி ஆகிய 3 பேர் மட்டுமே அரசியலில் நுழைந்துள்ளனர்.