இந்தியா

சத்தீஸ்கரில் 4 நக்ஸல்கள் சுட்டுக் கொலை: போலீஸார் அதிரடி

பிடிஐ

சத்தீஸ்கரில் போலீஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் நான்கு நக்ஸல் தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

சத்தீஸ்கரின் பிஜப்பூர் மாவட்டத்தில், மிர்துர் காவல் நிலையத் துக்கு உட்பட்ட பகுதிகளில் நக்ஸல் தீவிரவாதிகளின் நடமாட்டம் இருப்பதாக போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, நக்ஸல் தீவிரவாதிகளை பிடிக்க 55 பேர் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டு, மிர்துர் பகுதி முழுவதும் தீவிர தேடுதல் வேட்டை நடத்தப்பட்டது.

ஹல்லூர் மற்றும் ஹக்வா கிராமத்தையொட்டிய வனப்பகுதி களில், தனிப்படையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டிருந்தபோது, அங்கு பதுங்கி இருந்த நக்ஸல் தீவிரவாதிகள் திடீரென துப்பாக்கியால் சுட்டு தாக்குதல் நடத்தினர். பதிலுக்கு போலீஸார் தரப்பிலும் பதிலடி கொடுக்கப்பட்டது. சுமார் ஒரு மணி நேரம் இரு தரப்புக்கும் இடையே கடுமையான சண்டை நீடித்தது. ஒரு கட்டத்தில், உயிருக்கு பயந்து அங்கிருந்து தப்பிய நக்ஸல் தீவிரவாதிகள் அடர்ந்த வனப்பகுதிக்குள் ஓடிச்சென்று விட்டதாக கூறப்படுகிறது.

பின்னர் துப்பாக்கி சண்டை நடைபெற்ற இடத்தை சோதனையிட்டதில், குண்டுகள் பாய்ந்த நிலையில் நான்கு நக்ஸல் தீவிரவாதிகளின் சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. மேலும் அங்கிருந்த சிறிய ரக துப்பாக்கிகள், வெடிகுண்டுகள் உள்ளிட்ட ஆயுதங்களையும் போலீ ஸார் பறிமுதல் செய்தனர். அடர்ந்த வனப்பகுதிக்குள் ஓடிச்சென்று தலைமறைவான பிற நக்ஸல் தீவிரவாதிகளை பிடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக போலீஸ் தரப்பில் தெரிவிக் கப்பட்டது.

SCROLL FOR NEXT