இந்தியா

மகாராஷ்டிராவில் புயலை கிளப்பிய ஊழல் புகார் - அமைச்சர் அனில் தேஷ்முக் பதவி விலகமாட்டார்: சரத் பவார்

செய்திப்பிரிவு

ஊழல் குற்றச்சாட்டு விவகாரத்தில் மகாராஷ்டிர அமைச்சர் அனில் தேஷ்முக் பதவி விலக மாட்டார் என தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவர் சரத் பவார் கூறியுள்ளார்.

அண்மையில் தொழிலதிபர் முகேஷ் அம் பானியின் வீட்டுக்கு அருகே வெடிபொருட்கள் நிரம்பிய கார் நிறுத்தப்பட்டிருந்தது. இந்த விவகாரத்தில் அந்த காரின் உரிமையாளர் மான்சுக் ஹிரன் மர்மமான முறையில் இறந்தார். இந்த வழக்கில் உதவி காவல் ஆய்வாளர் சச்சின் வாஸுக்கும் தொடர்பு இருக்கலாம் என என்ஐஏ அதிகாரிகள் அவரை கைது செய்தனர்.

இந்த வழக்கில் மும்பை காவல் ஆணையர் பரம் வீர் சிங் மெத்தனமாக செயல்பட்டதாக அவர் ஊர்காவல் படைக்கு பணிமாற்றம் செய் யப்பட்டார். இதன்தொடர்ச்சியாக அமைச்சர் அனில் தேஷ்முக் ஹோட்டல்கள், பார்களில் மாதந்தோறும் ரூ.100 கோடி மாமூல் வசூலிக்க உத்தரவிட்டதாக முதல்வருக்கு புகார் கடிதம் எழுதியிருந்தார்.

இதையடுத்து, அமைச்சர் பதவி விலக பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வலியுறுத் தின. இந்த பிரச்சினையை நேற்று நாடாளு மன்றத்திலும் பாஜக கிளப்பியது.

இதுகுறித்து தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் நேற்று கூறும்போது, “பிப்ரவரி மத்தியில் அமைச்சர் அனில் தேஷ்முக் சச்சின் வாஸை சந்தித்ததாக பரம் வீர் சிங் குறிப் பிட்டுள்ளார். ஆனால் அமைச்சர் அந்தக் கால கட்டத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு பிப்ரவரி 27 வரை தனிமைப்படுத்திக் கொண்டி ருந்தார். இதிலிருந்தே இந்த குற்றச்சாட்டில் உண்மை இல்லை என்பதால் அனில் தேஷ்முக் பதவி விலகத் தேவையில்லை. மேலும் மான்சுக் ஹிரன் மர்மமாக இறந்ததற்கு யார் பொறுப்பு. இதனை திசை திருப்பவே அமைச்சர் மீது புகார் கூறப்பட்டுள்ளது. இது சரியல்ல” என்றார்.

இந்நிலையில் பரம் வீர் சிங் பணியிடமாற்ற உத்தரவை ரத்து செய்யக்கோரியும் அமைச் சரின் ஊழலை சிபிஐ விசாரிக்க வேண்டும் என்றும் மனு தாக்கல் செய்துள்ளார்.

SCROLL FOR NEXT