இந்தியா

மக்கள் பாவலர் மருது மறைந்தார்: பெங்களூருவில் இன்று உடல் அடக்கம்

செய்திப்பிரிவு

திருவண்ணாமலை மாவட்டத்தை பூர்வீகமாக கொண்ட மருது1960-களில் பெங்களூருவுக்கு இடம் பெயர்ந்தார். இந்திய தொலைபேசி தொழிற்சாலை யில் பணியாற்றி ஓய்வு பெற்ற அவர் தமிழக ஆய்வரண் அறிஞர் குணா, 'தமிழர் முழக்கம்' ஆசிரியர் வேதகுமார், பொன்.சந்திரன் உள்ளிட்டோருடன் இணைந்து கர்நாடக தமிழருக்கான இயக்கங்களை நடத்தினார்.

மக்கள் சமூக பண்பாட்டு கழகத் தின் சார்பில் வெளியிடப்பட்ட இவரது பாடல்கள் கூலித் தொழிலாளர்களின் உரிமையை பேசின.

'பறை முழக்கம்', 'உள்நாட்டு அகதிகள்' உள்ளிட்ட ஏராளமான நூல்கள் தனித்த அடையாளம் கொண்டவை. மக்கள் பாவலர் என அழைக்கப்பட்டார்.

பெங்களூருவில் உள்ள கிருஷ்ணராஜபுரத்தில் குடும்பத் தினருடன் வசித்த பாவலர் மருது உடல்நலக் குறைவு காரணமாக நேற்று காலை 11 மணியளவில் காலமானார். இவரது இறுதி ச் சடங்குகள் இன்று காலை அல்சூர் லட்சுமிபுரத்தில் நடக்கிறது

SCROLL FOR NEXT