இந்தியா

விவசாயிகளின் எதிர்காலம் பறிப்பு: காங். மூத்த தலைவர் ராகுல் குற்றச்சாட்டு

செய்திப்பிரிவு

சத்தீஸ்கர் மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சி நடைபெறுகிறது. அந்த மாநில அரசு சார்பில் விவசாயிகள், கால்நடைகள் வளர்ப்போருக்கு நிதியுதவி வழங்கும் விழா தலைநகர் ராய்ப்பூரில் நேற்று நடைபெற்றது. இதில் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி காணொலி வாயிலாக பேசியதாவது:

சத்தீஸ்கர் சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் அளித்த வாக்குறுதி தற்போது நிறைவேற்றப்பட்டுள்ளது. ஆனால் மத்திய அரசு வேறு பாதையில் சென்று கொண்டிருக்கிறது. புதிதாக 3 வேளாண் சட்டங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. இதன்மூலம் விவசாயிகளின் எதிர்காலம், வருமானத்தை பறிக்க மத்திய அரசு விரும்புகிறது.

சத்தீஸ்கர் மாநில அரசு விவசாயிகள், தொழிலாளர்கள், குறு, சிறு தொழிலதிபர்கள், இளைஞர்கள், பெண்களின் நலனுக்காக பாடுபட்டு வருகிறது. கரோனா காலத்திலும் சத்தீஸ்கர் மக்களுக்கு பெரும் சிரமங்கள் ஏற்படவில்லை. இவ்வாறு ராகுல் காந்தி பேசினார்.

SCROLL FOR NEXT