இந்தியா

வாரணாசியில் பாஜக கவுன்சிலர் சுட்டுக்கொலை

பிடிஐ

உத்தரப்பிரதேச மாநிலம், வார ணாசியில் பாஜக கவுன்சிலர் ஒருவர் மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார்.

வாரணாசியின் ராமபுரா வார்டு கவுன்சிலர் ஷிவசேத் (40). இவர் நேற்று முன்தினம் இரவு, நகரின் ககர்மட்டா என்ற இடத்திலிருந்து ராமபுராவில் உள்ள தனது வீட்டுக்கு திரும்பிக்கொண்டிருந்தார்.

இந்நிலையில் துல்சிபூர் பகுதி யில் மோட்டார் பைக்கில் வந்த மர்ம நபர்கள், ஷிவசேத்தை துப்பாக்கி யால் சுட்டுவிட்டு தப்பிவிட்டனர்.

இதில் படுகாயம் அடைந்த ஷிவசேத் மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டார். ஆனால் அவர் ஏற்கெனவே இறந்துவிட்ட தாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் குறித்து பெலுப்பூர் காவல் நிலையத்தில் அடையாளம் தெரியாத நபர் களுக்கு எதிராக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண் டுள்ளனர்.

வாரணாசி, பிரதமர் மோடியின் மக்களவை தொகுதி என்பது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT