இந்தியா

ரயிலில் புகைப்பிடிப்போருக்கு அபராதத்தை அதிகரிக்க முடிவு

செய்திப்பிரிவு

சதாப்தி விரைவு ரயில் கடந்த 13-ம் தேதி டெல்லியிலிருந்து உத்தராகண்ட் மாநிலம் டேராடூன் சென்று கொண்டிருந்தது. ராய்வாலா பகுதியில் சென்ற போது எஸ்5 பெட்டியில் தீப்பற்றியது. உடனடியாக அந்த பெட்டியை கழற்றி விட்டதால் பெரும் சேதம் தவிர்க்கப்பட்டது. சிகரெட் அல்லது பீடி துண்டை அணைக்காமல் யாரோ வீசியிருக்கலாம் என்றும் அதிலிருந்த டிஸ்யூ பேப்பர் மூலம் தீப்பிடித்திருக்கலாம் என்றும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதனிடையே, ரயில்வே வாரிய உறுப்பினர்கள் மற்றும் மண்டல பொது மேலாளர்களுடன் ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் ஆலோசனை நடத்தினார். இதையடுத்து, ரயிலில் புகைப்பிடிப்போருக்கு விதிக்கப்படும் அபராதத்தை கடுமையாக அதிகரிக்கவும் ரயில்வே சொத்துகளை சேதப்படுத்துவோரை கைது செய்து சிறையில் அடைக்கும் வகையிலும் சட்டத்தை திருத்த திட்டமிட்டுள்ளதாக ரயில்வே உயர் அதிகாரி ஒருவர் நேற்று தெரிவித்தார். ரயில்வே சட்டத்தின் 167-வது பிரிவின்படி, ரயிலில் புகைப்பிடிப்பவர்களுக்கு இப்போது ரூ.100 மட்டுமே அபராதம் விதிக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT