இந்தியா

ஆந்திராவில் தொடர் மழை எதிரொலி: பள்ளி கூரை இடிந்து விழுந்ததில் சிறுமி பலி

செய்திப்பிரிவு

ஆந்திர மாநிலம், சித்தூர், கடப்பா, நெல்லூர், பிரகாசம், குண்டூர் உள்ளிட்ட மாவட்டங்களில் கடந்த 20 நாட்களாக தொடர் மழை பெய்தது. இதனால் நதிகள், ஏரிகள் மற்றும் நீர் நிலைகள் நிரம்பி உள்ளன. பல ஏரிகள் உடைந்தன. சாலை போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. இன்னமும் பல கிராமங்களை வெள்ளம் சூழ்ந்துள்ளதால் போக்குவரத்து முடங்கி உள்ளது. விவசாயிகளுக்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், சித்தூர் மாவட்டம் குர்ரம்கொண்டா பஜார் வீதியில், பழைய கட்டிடத்தில் இயங்கி வந்த தனியார் பள்ளியில் உள்ள ஒரு வகுப்பறையின் மேற்கூரை நேற்று மதியம் திடீரென இடிந்து விழுந்தது. இதில் 13 எல்கேஜி மாணவர்கள் படுகாயமடைந்தனர். உடனடியாக அவர்கள் அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அங்கு சிகிச்சை பலனின்றி, ரேஷ்மா (5) என்ற மாணவி பரிதாபமாக உயிரிழந்தாள். மற்றவர்களுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இது குறித்து குர்ரம்கொண்டா போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

SCROLL FOR NEXT