இந்தியா

நாடுமுழுவதும் 23 கோடி கோவிட் பரிசோதனைகள் : ஒரே நாளில் 20 லட்சம் தடுப்பூசிகள்

செய்திப்பிரிவு

நாடு முழுவதும் மேற்கொள்ளப்பட்ட கோவிட் பரிசோதனைகளின் எண்ணிக்கை 23 கோடியைக் (23,03,13,163) கடந்தது.

மற்றொருபுறம் கோவிட் தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களின் எண்ணிக்கை நான்கு கோடியை (3,71,43,255) நெருங்குகிறது. 60 வயதுக்கு மேற்பட்டவர்களில், 1,28,58,680 பேர் கொவிட் தடுப்பூசி போட்டுள்ளனர்.

61வது நாளான நேற்று 20 லட்சத்துக்கும் அதிகமானோருக்கு (20,78,719) தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

நாட்டில் கோவிட் சிகிச்சை பெறுபவர்களின் மொத்த எண்ணிக்கை இன்று 2,52,364-ஐ எட்டியுள்ளது. மகாராஷ்டிரா, பஞ்சாப், கர்நாடகா, குஜராத் மற்றும் தமிழகத்தில் கோவிட் தினசரி பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் 35,871 பேருக்கு புதிதாக பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

இவர்களில் 79.54 சதவீதம் பேர் மேற்கண்ட 5 மாநிலங்களைச் சேர்ந்தவர்கள்.
மகாராஷ்டிராவில் அதிபட்சமாக 16,620 பேருக்கு புதிதாக பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதற்கு அடுத்தபடியாக கேரளாவில் 1,792 பேருக்கும், பஞ்சாப்பில் 1,492 பேருக்கும் புதிதாக பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

நாட்டில் கோவிட் தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை இன்று 1,10,63,025-ஐத் தொட்டது. கடந்த 24 மணி நேரத்தில் 17,741 பேர் குணமடைந்துள்ளனர். 172 பேர் கோவிட் தொற்றால் உயிரிழந்துள்ளனர்.

SCROLL FOR NEXT