இந்தியா

பிஹாரில் மண்ணின் மைந்தர்களுக்கும் மற்றவர்களுக்குமான போட்டி: நிதிஷின் வெற்றிக்கு உதவிய வெளிமாநிலக் குழு

செய்திப்பிரிவு

பிஹார் சட்டப்பேரவை தேர்தல், ‘பிஹாரிக்கும் பாஹரிக்கும் (வெளி மாநிலத்தவர்)’ நடந்த போட்டி யாகக் கருதப்படுகிறது. இதில் நிதிஷ்குமாரின் வெற்றிக்கு உதவிய, அவரது பிரச்சார வடி வமைப்பாளர் பிரசாந்த் கிஷோர் தலைமையிலான குழுவினர் அனை வரும் வெளிமாநிலத்தவர் ஆவர்.

பிஹார் தேர்தலுக்கு முன் அம் மாநிலத்தின் முசாபர்பூரில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, முதல்வர் நிதிஷ்குமாரின் மரபணுவில் ஏதோ பிரச்சினை இருப்பதாக கூறினார். இதனால் மிகவும் அதிர்ந்துபோன நிதிஷ், பிஹார் மக்களை பிரதமர் அவமதித்துவிட்டதாக கூறினார். இதை பிஹார் தேர்தலில் வெளி மாநிலத்தவர் மற்றும் பிஹார்வாசி களுக்கு இடையிலான போட்டி என சித்தரித்து நிதிஷ் பிரச்சாரம் செய்த தும் அவரது மெகா கூட்டணியின் வெற்றிக்கு வழிவகுத்ததாகக் கூறப்படுகிறது.

இதன் பின்னணியில் இருந்த நிதிஷின் பிரச்சார வடிவமைப்பாளர் பிரசாந்த் கிஷோர் மற்றும் அவரது குழுவினர் அனைவரும் வெளி மாநிலத்தவர்களாக உள்ளனர்.

பிரசாந்த் கிஷோர், அண்டை மாநிலமான ஜார்க்கண்டை சேர்ந்த வர். இவரது குழுவில் இடம்பெற்ற முக்கிய நபர்களில் ஒருவரான பரோமா பட், காஷ்மீரைச் சேர்ந்தவர். மற்றொரு உறுப்பினர் கர்நாடகத் தின் பாயல் காமத். இக்குழுவினர், தேர்தல் நேரத்தில் எதிரணியினர் கிளப்பிய அவதூறு மற்றும் புகார் களை சமாளிக்கும் வகையில் அரசி யல் யுக்திகளை நிதிஷுக்கு உடனுக் குடன் அளித்துவந்தனர். மேலும் நிதிஷின் பேஸ்புக் மற்றும் ட்விட்டர் பக்கங்களை நிர்வகித்து வந்தனர்.

ஐஐடி, ஐஐஎம், டெல்லி ஜவஹர் லால் நேரு பல்கலைக்கழகம் என நாட்டின் சிறந்த கல்வி நிறுவனங் களில் பட்டம் பெற்றவர்கள் இவர் கள். மேலும் இவர்கள் வெளி மாநிலங்களைச் சேர்ந்தவர்கள்.

ராணுவப் படை போல இக்குழுவி னர், பிஹாரின் 243 தொகுதிகளிலும் நிதிஷ் மீது மோடி மற்றும் பாஜக தலைவர்கள் கிளப்பிய புகார்களை தொகுத்தனர். அவற்றுக்கு தகுந்த பதிலடியை உடனுக்குடன் தயார் செய்து, அதை அதேநாளில் நிதிஷ் பேச உதவினர்.

இதுகுறித்து அக்குழுவின் இயக் குநர்களில் ஒருவரான பிரத்தீக் ஜெயின் ‘தி இந்து’விடம் கூறும் போது, “எங்கள் திறமையான அணுகுமுறைக்கு இரு பெரிய உதாரணங்களை கூறமுடியும். பாஜகவின் மீடியா விளம்பர திறமையை எதிர்கொள்ளும் வகை யில் எந்தவொரு டி.வி., பத்திரிகை யிலும் விளம்பரம் அளிக்காமல் தவிர்த்து விட்டோம். ஆகஸ்ட் 18-ம் தேதி ஆரா நகரில் பேசிய மோடி, பிஹாருக்கு ரூ. 1,25,003 கோடி மதிப் பிலான திட்டங்களை அறிவித்தார். இதை எதிர்கொள்ளும் வகையில் அதன் முழு விவரங்களை ஆராய்ந்து அடுத்த சில மணி நேரத்தில் நிதிஷி டம் அளித்தோம். அதை அன்று மாலையே செய்தியாளர் கூட்டத்தில் நிதிஷ் பேசியது, நல்ல பதிலடியாக பார்க்கப்பட்டது” என்றார்.

ஐக்கிய நாடுகள் சபைக்காக ஆப்ரிக்காவில் பணியாற்றியவரான பிரசாந்த் கிஷோர், 2011-ம் ஆண்டில் அப்பதவியை ராஜினாமா செய்துவிட்டு இந்தியா திரும்பினார். இங்கு இந்திய அரசியல் செயல் பாட்டுக் குழு என்ற பெயரில் சிறந்த கல்வி நிறுவனங்களின் இளைஞர் களுடன் ஒரு குழுவை அமைத்தார்.

இந்தக் குழுவுடன் சேர்ந்து, மக்களவை தேர்தலில் மோடியின் பிரச்சார வடிவமைப்பாளராக பணி யாற்றினார். பாஜகவின் வெற்றிக்கு உதவிய பிரசாந்த், பின்னர் அக் கட்சியின் தேசிய தலைவர் அமித்ஷாவால் மோடியிடம் இருந்து கழற்றிவிடப்பட்டார். இந்நிலையில் பிஹார் வெற்றியை தொடர்ந்து, அடுத்து தேர்தலை சந்திக்கும் மேற்கு வங்கத்தின் ஆளும் திரிணமூல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி இவருக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

SCROLL FOR NEXT