கேரளத்தில் வாக்காளர் பட்டியலில் மோசடி நடந்துள்ளதாக காங்கிரஸ் தரப்பில் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
வருகிற ஏப்ரல் 6ம் தேதி கேரள சட்டப்பேரவை தேர்தல் நடக்க உள்ள நிலையில் தேர்தல்ஆணையம் வாக்காளர் பட்டியலை கடந்த ஜனவரி 20ம் தேதி வெளியிட்டது. தற்போது தேர்தல்பரப்புரை தீவிரமாக இருந்துவரும் நிலையில் கேரளத்தில் எதிர்கட்சியாக இருக்கும் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ரமேஷ் சென்னிதலா வாக்காளர் பட்டியல் தயாரிப்பில் மோசடி நடந்திருப்பதாகவும், ஒவ்வொரு தொகுதியிலும் போலி வாக்காளர்கள் சேர்க்கப்பட் டிருப்பதாகவும் குற்றம் சாட்டி யுள்ளார்.
மூதாட்டிக்கு 5 அட்டை
அதாவது ஒரே பெயர் ஒரு தொகுதியில் 5 முதல் 6 முறை சேர்க்கப்பட்டிருப்பதாக அவர் கூறியுள்ளார். அவற்றில் பெரும்பாலானவற்றில் புகைப் படம், முகவரி உட்பட ஒரே மாதிரி பயன்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இதன் மூலம் தேர்தல் ஆணையம் ஒரே நபருக்கு பல வாக்காளர் அடையாள அட்டைகளை வழங்கியுள்ளது. உதாரணமாக வடக்கு காசர்கோடு மாவட்டத்தில் உடுமா தொகுதியில் 61 வயதாகும் குமாரி என்பவருக்கு 5 வாக்காளர் அடையாள அட்டைகள் வழங்கப்பட்டுள்ள தாகக் கூறியுள்ளார். அந்த 5 அட்டைகளின் வரிசை எண் களையும் ஆதாரமாக அவர் வெளியிட்டுள்ளார். இதுபோல ஒவ்வொரு தொகுதியிலும் போலி வாக்காளர்கள் சேர்க்கப்பட்டிருக் கிறார்கள் எனக் கூறும் அவர் இதுபோன்ற மோசடிகளை அதிகாரிகளின் உதவி இல்லாமல் செய்ய முடியாது என்றும் குற்றம் சாட்டியுள்ளார்.
தேர்தலில் பெரிய அளவில் சதி நடக்கிறது. இதுதொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும். வாக்காளர் பட்டியலை ஆராய வேண்டும் என்று தலைமை தேர்தல் ஆணையருக்குக் கடிதம் அனுப்பியுள்ளார்.
போலி வாக்காளர்கள் பெயர்கள் நீக்கப்பட்ட பின்னரே தேர்தலை நடத்த வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.