இந்தியா

பெங்காலி மொழியில் ஐஎஸ் வெளியிட்ட ஆடியோ மெசேஜ்

விஜய்தா சிங்

ஐஎஸ் தீவிரவாத அமைப்பு 2.47 நிமிடங்கள் ஓடும் ஆடியோ மெசேஜ் ஒன்றை பதிவேற்றியுள்ளது. அதில் ஜிஹாதில் இணைய அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

இந்தியாவில் பெங்காலி மொழி பேசுபவர்கள் எண்ணிக்கை அதிகமிருப்பதால் உளவுத்துறை அதிகாரிகள் அதிக எச்சரிக்கையுடன் இந்த விவகாரத்தை அணுகி வருகின்றனர்.

'கலிஃபேட் இஸ் பேக்' என்ற தலைப்பில் வெளியான இந்த ஆடியோ செய்தி குறிப்பாக வங்கதேச நாட்டின் இளைஞர்களை குறிவைத்து வெளியிடப்பட்டதாக தெரிகிறது. அதில் ‘ஜிஹாதில் இணையுங்கள், வெற்றி இல்லாவிடினும் தியாகம் எய்துங்கள்’ என்று கூறப்பட்டுள்ளது.

“அயல்நாட்டைச் சேர்ந்த வங்கதேச முஸ்லிம்கள் சிலர் ஐஎஸ் அமைப்பில் சேர்ந்துள்ளனர், இவர்கள் சிரியா மற்றும் இராக்கில் இருப்பதாக தகவல்கள் கிடைத்துள்ளன. எனவே இந்த ஒலிவடிவ செய்தி வங்கதேசத்தவரை நோக்கியதாகவே இருக்கலாம் என்று கருதுகிறோம். இந்தியாவில் இது தாக்கம் ஏற்படுத்தாது என்று கருதுகிறோம், இருப்பினும் நாங்கள் கண்காணித்து வருகிறோம்” என்று மத்திய உள்துறை அமைச்சகத்தைச் சேர்ந்த மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

ஐஎஸ் தங்கள் நாட்டில் இல்லை என்று வங்கதேசம் மறுத்து வந்தாலும், சமீபத்தில் இத்தாலி மற்றும் ஜப்பான் நாட்டுக்காரர்கள் இருவர் கொல்லப்பட்டதில் ஐஎஸ் அமைப்பு பங்கு இருப்பதாக அந்த அமைப்பு பொறுப்பேற்றுள்ளதும் கவனிக்கத்தக்கது.

SCROLL FOR NEXT