இந்தியா

கரோனா வைரஸ் பரவலை தடுக்க அனைத்து மாநில முதல்வர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி இன்று ஆலோசனை

செய்திப்பிரிவு

கரோனா வைரஸ் பரவலை தடுக்க அனைத்து மாநில முதல்வர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி இன்று முக்கிய ஆலோசனை நடத்துகிறார்.

கடந்த ஆண்டு மார்ச் மாதத்தில் இந்தியாவில் கரோனா வைரஸ் பரவத் தொடங்கியது. வைரஸ் பரவலை கட்டுப்படுத்த மார்ச் இறுதியில் நாடு முழுவதும் ஊரடங்கு அமல் செய்யப்பட்டது. அப்போது பிரதமர் நரேந்திர மோடி அனைத்து மாநில முதல்வர்களுடன் பலமுறை காணொலி வாயிலாக ஆலோசனை நடத்தினார்.

எனினும் மக்களின் வாழ்வாதாரம், நாட்டின் பொருளாதாரத்தை கருத்தில் கொண்டு கடந்த ஜூன் முதல் ஊரடங்கு தளர்த்தப்பட்டது. இதன்பின் கடந்த செப்டம்பரில் வைரஸ் பரவல் உச்சத்தை தொட்டது. அப்போது நாளொன்றுக்கு 90,000 முதல் ஒரு லட்சம் பேருக்கு தொற்று ஏற்பட்டது.

அக்டோபர், நவம்பர், டிசம்பர், ஜனவரி மாதங்களில் வைரஸ் பரவல் படிப்படியாக குறைந்து வந்தது. ஆனால் கடந்த பிப்ரவரிமுதல் மகாராஷ்டிரா உள்ளிட்ட சில மாநிலங்களில் கரோனா தொற்று அதிகரித்து வருகிறது.

மகாராஷ்டிராவில் தற்போதுநாள்தோறும் 15,000- க்கும்மேற்பட்டோருக்கு தொற்று ஏற்படுகிறது. பஞ்சாப், கேரளா, கர்நாடகா, குஜராத், தமிழகம், மத்திய பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களிலும் தினசரி தொற்று அதிகமாக உள்ளது.

மத்திய சுகாதாரத் துறை நேற்று வெளியிட்ட புள்ளிவிவரத்தில் நாடு முழுவதும் புதிதாக 24,492 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மகாராஷ் டிராவில் 15,051 பேர், பஞ்சாபில் 1,818 பேர், கேரளாவில் 1,054 பேர்,கர்நாடகாவில் 932 பேர், குஜராத்தில் 890 பேருக்கு புதிதாக வைரஸ்தொற்று உறுதி செய்யப்பட்டி ருக்கிறது.

தினசரி தொற்று அதிகரித்து வருவதால் கரோனா நோயாளி களின் எண்ணிக்கை 2.23 லட்சமாக உயர்ந்திருக்கிறது. இதில் 59 சதவீத நோயாளிகள் மகாராஷ்டிராவில் உள்ளனர். வைரஸ் பரவலை தடுக்க மகாராஷ்டிராவில் மும்பை, நாக்பூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ஊரடங்கு அமல் செய்யப் பட்டிருக்கிறது.

குஜராத்தில் அகமதாபாத், வடோதரா, சூரத், ராஜ்காட் உள்ளிட்ட நகரங்களில் வரும் 31-ம் தேதி வரை இரவு நேர ஊரடங்கு அமல் செய்யப்பட்டுள்ளது. மத்திய பிரதேசத்தில் ஜபல்பூர், குவாலியர், உஜ்ஜைன், ரத்லம், புர்கான்பூர் உள்ளிட்ட நகரங்களில் சந்தைகள் மூடப்பட்டுள்ளன. தலைநகர் போபால் மற்றும் இந்தூரில் புதன்கிழமை முதல் இரவு நேர ஊரடங்கு அமல் செய்யப்படுகிறது.

நாட்டின் சில மாநிலங்களில் கரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வரும் நிலையில் அனைத்து மாநில முதல்வர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி இன்று முக்கிய ஆலோசனை நடத்துகிறார். இதில் வைரஸ் பரவலை கட்டுப் படுத்துவது தொடர்பாக முக்கிய முடிவுகள் எடுக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

30 லட்சம் பேருக்கு தடுப்பூசி

கடந்த ஜனவரி 16-ம் தேதி நாடு முழுவதும் கரோனா தடுப்பூசி போடும் பணி தொடங்கியது. முதல்கட்டமாக சுகாதார ஊழியர்களுக்கும் முன்கள பணியாளர்களுக்கும் தடுப்பூசி போடப்பட்டது. கடந்த 1-ம் தேதி முதல் 60 வயதுக்கு மேற்பட்டோர், 45 வயதுக்குஉட்பட்ட நாள்பட்ட நோயாளிகளுக்கு தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. அடுத்தகட்டமாக 50 வயதுக்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி போடும் பணி விரைவில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வரும் நிலையில் தடுப்பூசிபோடும் பணி தீவிரப்படுத்தப்பட் டுள்ளது. மத்திய சுகாதாரத் துறைநேற்று வெளியிட்ட புள்ளிவிவரத் தில், "கடந்த திங்கள்கிழமை மட்டும் 30,39,394 பேருக்கும், இதுவரை 3,29,47,432 தடுப்பூசிகள் பயனாளிகளுக்கும் போடப்பட்டிருக்கிறது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT