டீசல் விலை லிட்டருக்கு 50 பைசா உயர்த்தப் பட்டுள்ளது. இந்த விலை உயர்வு சனிக்கிழமை நள்ளிரவு முதல் அமலுக்கு வந்தது.
சென்னையில் வரிகள் உள்பட ஒரு லிட்டருக்கு 71 பைசா உயர்ந்துள்ளது. இதன் படி ஒரு லிட்டர் டீசல் விலை ரூ.60.50-ல் இருந்து ரூ.61.21 ஆக அதிகரித்துள்ளது.
டீசல் விற்பனையில் எண்ணெய் நிறுவனங்களுக்கு ஏற்படும் நஷ்டம் முழுமையாக குறையும் வரை மாதம் தோறும் 50 பைசாவை உயர்த்தும் கொள்கை கடைபிடிக்கப்பட்டு வருகிறது. காங்கிரஸ் கூட்டணி அரசு முடிந்து பாஜக கூட்டணி அரசிலும் இது தொடர்கிறது.