முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் நினைவாக, அமைதி, ஆயுத ஒழிப்பு மற்றும் மேம்பாட் டுக்கு சிறந்த பங்களிப்பை வழங்கு பவர்கள் அல்லது அமைப்பு களுக்கு அமைதி விருது வழங்கப் படுகிறது. இது மிகவும் கவுரவமான விருதாக கருதப்படுகிறது. குடியரசு துணைத் தலைவர் ஹமீது அன்சாரி தலைமையிலான சர்வதேச பரிசு குழுவினர், அமைதி விருதுக்குரியவர்களை தேர்ந்தெடுக்கின்றனர்.
இந்நிலையில், ‘இந்திரா காந்தி அமைதி விருது -2015’க்கு, அகதி கள் நலனுக்கான ஐ.நா. ஆணை யத்தை பரிசுக் குழுவினர் தேர்ந் தெடுத்துள்ளனர் என்று இந்திரா காந்தி நினைவு அறக்கட்டளை செயலர் சுமன் துபே நேற்று தெரிவித்தார்.
கடந்த 1950-ம் ஆண்டு, அகதிகளுக்கான ஆணையத்தை ஐ.நா. உருவாக்கியது. இரண்டாம் உலகப் போரின் போது தாய் நாட்டை விட்டு இடம்பெயர்ந்த அகதிகளுக்கு உதவும் நோக்கத் தில்தான் இந்த ஆணையம் தொடங்கப்பட்டது. அதன்பின், உலகளவில் இடம்பெயரும் அகதிகளின் நல்வாழ்வுக்காக ஐ.நா. ஆணையம் தொடர்ந்து பணியாற்றி வருகிறது.
தாய்நாட்டை விட்டு வெளி யேறிய லட்சக்கணக்கான அகதி களுக்கு உதவியது, அவர்களின் மறுவாழ்வுக்கு பல்வேறு நடவடிக் கைகள் எடுத்தது போன்ற சிறந்த பங்களிப்புக்காக, இந்திரா காந்தி அமைதி விருது வழங்கப்படுவ தாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்திரா காந்தி அமைதி விருது, ரூ.25 லட்சம் ரொக்கப் பரிசு மற்றும் சான்றிதழ் அடங்கியது.