இந்தியா

இந்தியாவில் பாதுகாப்பு நடைமுறைகள் பின்பற்றப்படவில்லை: மக்கள் அலட்சியத்தால் கரோனா பரவுகிறது - மத்திய அமைச்சர் ஹர்ஷ்வர்தன் குற்றச்சாட்டு

செய்திப்பிரிவு

இந்தியாவில் கரோனா வைரஸ் பரவல் மீண்டும் அதிகரித்து வரும் வேளையில், சமூக இடைவெளி உள்ளிட்ட பாதுகாப்பு நடைமுறை களை மக்கள் பின்பற்றுவதில்லை என மத்திய சுகாதாரத் துறை அமைச் சர் ஹர்ஷ்வர்தன் கூறியுள்ளார்.

மத்திய சுகாதார அமைச் சகம் நேற்று வெளியிட்ட புள்ளி விவரப்படி, கரோனா புதிய நோயாளிகளின் எண்ணிக்கை 26,291 ஆக பதிவாகியுள்ளது. இதன் மூலம் மொத்த நோயாளிகள் எண் ணிக்கை 1 கோடியே 13 லட்சத்து 80 ஆயிரத்தை கடந்துள்ளது. கரோனா தொற்றுக்கு புதிதாக 118 பேர் உயிரிழந்தனர். இதன் மூலம் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 1,58,725 ஆக உயர்ந்துள்ளது.

இதுவரை மொத்தம் 1 கோடியே 10 லட்சத்து 7,352 பேர் குணம் அடைந்துள்ளனர். இது மொத்த நோயாளிகள் எண்ணிக்கையில் 97 சதவீதம் ஆகும். இந்நிலையில் கரோனா தொற்றுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 2,19,262 ஆக உயர்ந்துள்ளது. நேற்று பதிவான புதிய நோயாளிகள் எண்ணிக்கையே 2021-ம் ஆண்டின் அதிகபட்ச எண்ணிக்கை ஆகும். மேலும் புதிய நோயாளிகள் எண்ணிக்கை 7-வது முறையாக 20 ஆயிரத்தை கடந்துள்ளது.

இதற்கு முன் கடந்த ஆண்டு டிசம்பர் 20-ம் தேதி புதிய நோயாளி கள் எண்ணிக்கை அதிகபட்சமாக 26,624-ஐ தொட்டது.

நாடு முழுவதும் நேற்று பதி வான புதிய நோயாளிகள் எண் ணிக்கையில் 78 சதவீதத்துக்கும் மேற்பட்டோர் மகாராஷ்டிரா, பஞ்சாப், கர்நாடகா, குஜராத், தமிழ்நாடு ஆகிய 5 மாநிலங்களை சேர்ந்தவர்கள் என சுகாதார அமைச்சகம் கூறுகிறது. மேலும் நேற்று பதிவான உயிரிழந்தோர் எண்ணிக்கையில் 82.2 சதவீதம் பேர் மகாராஷ்டிரா, பஞ்சாப், கர்நாடகா, குஜராத், தமிழ்நாடு ஆகிய 5 மாநிலங்களை சேர்ந்தவர்கள் என்று தெரிவிக்கிறது.

நேற்று பதிவான புதிய நோயாளிகளில் 63.21 சதவீதம் பேர் (16,620) மகாராஷ்டிராவை சேர்ந்தவர்கள் ஆவர். இதைத் தொடர்ந்து கேரளா (1,792), பஞ்சாப் (1,492) ஆகிய மாநிலங்களில் அதிக எண்ணிக்கையில் புதிய நோயாளிகள் பதிவாகியுள்ளனர்.

உலகின் கரோனா வைரஸ் தொற்றால் மிகவும் பாதிக்கப் பட்டுள்ள நாடுகளில் அமெரிக்கா மற்றும் பிரேசிலை தொடர்ந்து தற்போது 3-வது இடத்தில் இந்தியா உள்ளது.

இந்நிலையில் மத்திய அமைச் சர் ஹர்ஷ்வர்தன் நேற்று கூறும் போது, “சில மாநிலங்களில் மட்டுமே கரோனா வைரஸ் தொற்று அதிகரித்து வருகிறது. 5-6 மாநிலங்களில் மட்டும் கரோனா நோயாளிகளில் 85 சத வீதம் பேர் உள்ளனர். சமூக இடை வெளி உள்ளிட்ட பாதுகாப்பு நடை முறைகளை மக்கள் பின்பற்றா ததே இதற்கு முக்கிய காரணம் ஆகும். கடந்த ஆண்டு கரோனா வைரஸ் பரவத் தொடங்கியபோது பாதுகாப்பு விதிமுறைகளை மக் கள் எந்த அளவுக்கு கடைபிடித் தார்களோ அதே அளவுக்கு இப் போதும் கண்டிப்பாக கடை பிடிக்க வேண்டும்” என்றார்.

SCROLL FOR NEXT